கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 2 பேர்; 40 ஆண்டுகளின் பின்னர் கைது

84

 

கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர், நாற்பது ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 12 வயதான சிறுவன் ஒருவனை இந்த இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

64 வயதான எட்வர்ட் பாலோசியஸ் மற்றும் 59 வயதான சீன் ஹான்கொக் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவனை இருவரும் பல சந்தர்ப்பங்களில் பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இருவரும் தன்னார்வ தொண்டர்களாக கடமையாற்றிய வந்த காலத்தில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இருவரும் எதிர்வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

SHARE