கனடாவில் மனைவியை 35 தடவை குத்தி கொன்றவருக்கு தண்டனை

91

 

கனடாவில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தின் பிரமட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு பொதுப் பூங்கா ஒன்றில் வைத்து குறித்த நபர் தனது மனைவியை 35 தடவைகள் கொடூரமாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.

66 வயதான ஜர்னாயில் ரன்டாவா என்ற நபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 64 வயதான டால்பிர் என்ற பெண்ணே உயிரிழந்திருந்தார்.இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து குறித்த நபர் இவ்வாறு தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE