கனடாவில் தொழில் மோசடியில் சிக்கிய இந்திய பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு வந்த பெண் ஒருவரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார்.
ரொறன்ரோவைச் சேர்ந்த தேவான்சி பொட்டார் என்ற பெண் 15000 டொலர்களை இழந்துள்ளார்.இது ஓர் சிறிய தொகை கிடையாது எனவும், தனது வாழ் நாள் சேமிப்பு எனவும் அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு கனடாவிற்குள் குடியேறிய தேவான்சி தொழில் வாய்ப்பு ஒன்றிற்காக காத்திருந்தார்
. இன்ஸ்டாகிராமில் செய்யப்பட்ட விளம்பரம் ஒன்றின் மூலம் தேவான்சி மோசடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வோல்மார்ட் நிறுவனம் பகுதிநேர பணிகளை வழங்குவதாக விளம்பரம் செய்யப்பட்டு, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் வோல்மார்ட் நிறுவனம் இவ்வாறான எந்தவொரு தொழில் வாய்ப்பினையும் வழங்கவில்லை என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.