கனடாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கரம்; 5 பேர் பலி

61

 

கனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சஸ்கட்ச்வானின் டேவிட்சன் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் 80 வயதான ஆண் ஒருவரும், 81 வயதான பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் மேலும் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீயணைப்புப் படையினர் வீட்டிற்குள் பிரவேசித்த போது இரண்டு வயோதிபர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் வீட்டில் மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SHARE