கனடாவில் வீதியில் வன்முறையில் ஈடுபட்ட 4 பேரை தேடும் பொலிஸார்

119

 

கனடாவின் பிரம்டனில் வீதியொன்றில் வன்முறையில் ஈடுபட்ட நான்கு பேரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை பிரம்டனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஈகள்ரிட்ஜ் மற்றும் டோர்பிராம் வீதிகளுக்கு அருகாமையில் வாகமொன்றில் சென்ற நபரை மற்றுமொரு வாகனத்தில் சென்றவர்கள் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் நான்கு இளைஞர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.

மோதலில் ஈடுபட்ட 28 வயதான ஆகாஸ்டீப் சிங் மற்றும் 23 வயதான ராமன்பிரீட் மாசியா ஆகியோரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

ஏனைய இருவரும் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும் இவர்கள் தெற்காசிய பூர்வீகத்தைக் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

SHARE