கனடாவில் 6 இலங்கையர்களை படுகொலை செய்தவரின் விளக்க மறியல் நீடிப்பு

82

 

கனடாவின் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் விளக்க மறியல் காலம் நீடிக்க்பபட்டுள்ளது.

19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞர் பாதுகாப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி எவான் லைடெல் தெரிவித்துள்ளார்.

கத்தி போன்ற கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி நான்கு சிறுவர்கள் ஒரு பெண் ஒரு ஆண் உள்ளிட்ட ஆறு பேரை சொய்சா படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சொய்சா நேற்றைய தினம் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இந்த கொலை வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த இளைஞனின் குடும்பத்துடன் தொடர்பு பேணி வருவதாகவும், அவர்கள் மிகுந்த வருத்தத்துடன் இருப்பதாகவும் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இளைஞனின் குடும்பத்தினர் தற்பொழுது இலங்கையில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அவர்கள் எந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்பது பற்றிய விபரங்களை சட்டத்தரணி வெளியிடவில்லை.

சந்தேக நபரின் உளச் சுகாதார நிலைப்பற்றி எவ்வித கருத்தையும் வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE