கமல்ஹாசன் படத்தால் மிகப்பெரிய நஷ்டம்.. லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை

114

 

நடிகர் கமல்ஹாசனின் உத்தமவில்லன் படம் மிகப்பெரிய நஷ்டம் ஆனது தான் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பெரிய அளவு பணக்கஷ்டத்தில் மாட்டி அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணம்.

அதை இயக்குனர் லிங்குசாமியும் பல்வேறு பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகிறார். மேலும் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல் தங்களுக்கு ஒரு படம் நடித்துக்கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் கமல். அது பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும் அதற்காக தேதி கொடுக்கவில்லை என லிங்குசாமி கூறி இருக்கிறார்.

பொய்.. நம்பாதீங்க
இந்நிலையில் ஒரு youtube சேனலில் உத்தமவில்லன் படம் லாபம் தான் என பிரபல பத்திரிகையாளர் பேசி இருப்பதற்கு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொய் என குறிப்பிட்டு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுத்திய படம் இது என கமல்ஹாசனுக்கும் தெரியும் என அதில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

SHARE