கமல் ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. முழு விவரம் இதோ

65

 

உலக நாயகன் என கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் கமல் ஹாசன். விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கமல் அடுத்தடுத்த பல படங்களில் கமிட்டாகியுள்ளார்.

இந்தியன் 2 மற்றும் 3, தக் லைஃப், கல்கி 2898 AD ஆகிய படங்களை கமல் ஹாசன் கைவசம் உள்ளது. இதில் ஹெச். வினோத்துடன் இணைந்து கமல் ஹாசன் பண்ணவிருந்த படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பிசினஸ் மேன் என பல ரூபங்கள் கொண்ட இந்த விஸ்வரூப நாயகனின் சொத்து மதிப்பு குறித்து தான் தற்போது பார்க்கவிருக்கிறோம். 2024ல் கமல் ஹாசனின் சொத்து மதிப்பு ரூ. 350 கோடிக்கும் மேல் இருக்கிறது என சொல்லப்படுகிறது.

சம்பளம்
இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடிக்கும் மேல் சம்பளமாக வாங்கி வருகிறாராம். கல்கி 2898 AD திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ. 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என திரை வட்டாரத்தில் பேச்சு உள்ளது.

கமல் ஹாசன் வீட்டின் மதிப்பு ரூ. 19 கோடி இருக்குமாம். இவருடைய வீடு மட்டுமின்றி கமல் ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து ஆசையா சொத்துக்களின் மதிப்பு ரூ. 92 கோடி என பிரபல பத்திரிகை கூறுகிறது.

நடிகர் கமல் ஹாசன் பயன்படுத்தும் கார்கள், BMW 730LD – ரூ. 1.30 கோடி, Lexus Lx 570 – ரூ. 2.80 கோடி, Toyota Prado – ரூ. 96 லட்சம், Mitsubishi Pajero – ரூ. 28 லட்சம் முதல் ரூ. 33 லட்சம் வரை, Mercedes Benz E 220 – ரூ. 76 லட்சம், Range Rover Evoque -ரூ. 76 லட்சம்.

SHARE