கரட் தரும் பயன்கள்

719
கண்களுக்கு அரணான கேரட்டில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.

முதுமை காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டை பீட்டா கரோட்டின் தடுக்கிறது.

கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிட்டால் பெரும்பான்மையான சத்துக்கள் விரையம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.

தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் நீங்கி குடல் புண்கள் வராமல் தடுக்கும்.

பாதிவேக வைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.

கேரட் அல்வா

முதலில் பாலை நன்கு கெட்டியாகும் வரை காய்ச்சி கொள்ள வேண்டும்.

பால் கெட்டியானதும் அதில் துருவிய கேரட்டை சேர்த்து, கேரட் பாலை முற்றிலும் உறிஞ்சும் வரை கேரட்டை வேக வைக்க வேண்டும்.

பின்னர் இதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக ஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்தவுடன், கேரட்டை போட்டு 10-15 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.

பின்னர் சர்க்கரை சேர்த்து 15- 20 நிமிடம் வேக வைக்கவும், சர்க்கரையானது முற்றிலும் கரைந்த பின்பு அதன் மேல் முந்திரி, பாதாம் மற்றும் ஏலக்காய் பொடி தூவி இறக்கினால் சுவையான கேரட் அல்வா ரெடி.

கேரட் ஜூஸ்

முதலில் கேரட்டை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பின்னர் மிக்சியில் போட்டு நன்கு அரைத்தவுடன், சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்.

SHARE