நடிகை கஜோலுக்கும், தயாரிப்பாளர் கம் இயக்குநர் கரண் ஜோகருக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் சமீபகாலமாக அவர்களுக்குள் இடையேயான பிரச்னை தீர்ந்துவிட்டது போன்றே தெரிகிறது. அதை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமும் உறுதியாக்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பையில் நடந்த மருத்துவமனை ஒன்றின் திறப்பு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அவர் தவிர்த்து இந்த விழாவில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும் பங்கேற்று இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கரண் ஜோகரும், கஜோல் பங்கேற்றனர். இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது அவர்கள் தங்களுக்குள் இருந்த பழைய பகையை எல்லாம் மறந்து சிரித்து பேசி மகிழ்ந்தனர். இதன்மூலம் அவர்களுக்குள் இடையே இருந்த பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது உறுதியாகியுள்ளது.