நாள் தோறும் 8 மில்லியன் வரையான மக்கள் விமானங்களில் பயணம் செய்கின்றனர். இவ் விமானப் பயணத்திற்கு பயன்படுத்தப்படும் பெட்ரோலால் சூழல் மாசடைதல் அதிகரிப்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் குறைந்தளவு காபனை வெளியிடக்கூடிய மாற்று எரிபொருளை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் கரும்பு சாற்றிலிருந்து ஜெட் விமானங்களுக்குரிய டீசலை தயாரிப்பதில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளதுடன் இதனால் 2 சதவீதம் வரை காபன் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் உயிர் எரிபொருளின் உதவியுடன் முதலாவது வர்த்தக விமான சேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தது, எனினும் முற்றுமுழுதாக சூழலுக்கு தீங்கு விளைவிக்காத எரிபொருளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். |