சன் டிவியின் செவ்வந்தி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் திவ்யா ஶ்ரீதர்.
அவர் விஜய் டிவி செல்லம்மா சீரியல் நடிகர் அர்னாவ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அர்னாவ்வின் நிஜமான பெயர் முகமது.
திவ்யா ஶ்ரீதர் கர்பமாக இருந்த நிலையில் அர்னாவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார், அதை பற்றி கேட்டால் தன்னை தாக்கிவிட்டர் என நடிகை புகார் கூறி இருந்தார்.
ஒரு வயதை தொட்ட குழந்தை
அதன் பின் திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அர்னாவ் குழந்தையை பார்க்கவும் வரவில்லை.
இந்நிலையில் தனது மகளுக்கு ஒரு வயது நிறைவடைந்து இருக்கிறது என சொல்லி திவ்யா ஶ்ரீதர் புது வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் cherish பண்ணுங்க, அவர்கள் வேகமாக வளர்ந்துவிடுகிறார்கள் என திவ்யா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.