கர்ப்பிணிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழங்கள்.

422
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.ஏனெனில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவுகளால் உங்கள் கருவை பாதிக்க வாய்ப்பிருக்கிறது.பொதுவாக கர்ப்பகாலத்தில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது நல்லது.கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

மாம்பழம்

இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது.

திராட்சை

நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ, மெட்டபாலிக் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் சோடியம் அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை

எலுமிச்சையை ஜூஸ் போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கருவிற்கு மிகவும் நல்லது.

அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல், காலை அசௌகரியம், செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.

ஆப்பிள்

வைட்டமின்கள் அதிகம் உள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.

பீச்

பீச் பழத்தில், குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் பி6 சத்துக்கள் நிறைந்துள்ளதால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்படுவது நல்லது.

SHARE