கலிபோர்னியாவில் விபத்தில் இந்திய குடும்பம் பலி

102

 

கலிபோர்னியாவில் இந்தியாவை சேர்ந்த குடும்பம் ஒன்று விபத்தில் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தருண் ஜார்ஜ். இவர் கலிபோர்னியாவில் பணியாற்றி வருகிறார்.

அவர் அங்கேயே தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தருண்ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் காரில் சென்றார்.

கலிபோர்னியாவில் பிளசன்டன் பகுதியில் ஸ்டோனிரிட்ஜ் டிரைவ் புட்ஹில் சாலையில் சென்றுகொண்டிருந்த போது அவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர்களது கார் முற்றிலுமாக நொறுங்கியது.

காரின் இடிபாடுகளில் சிக்கி தருண் ஜார்ஜ், அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய பொலிஸார் கார் முற்றிலுமாக நொறுங்கியிருப்பதால் அதிவேகமாக சென்றதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர். ன்றனர்.

SHARE