கல்கண்டு பாடல் வெளியீடு 

425



ராஜரத்னம் பிலிம்ஸ் சார்பில் ஜே.மகாலட்சுமி தயாரிக்கும் படம், ‘கல்கண்டு’. நாகேஷ் பேரனும், ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ் ஹீரோ. அவர் ஜோடியாக டிம்பிள் நடிக்கிறார். ஒளிப்பதிவு, கே.வி.சுரேஷ். இசை, கண்ணன். பாடல்கள்: யுகபாரதி, விவேகா, அண்ணாமலை, மதன் கார்க்கி. ஏ.எம்.நந்தகுமார் இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், செந்தில், மயில்சாமி, மனோபாலா உட்பட பலர் கலந்துகொண்டனர். இயக்குனர் பி.வாசு பேசும்போது, ‘நாகேஷ், ஆனந்த்பாபுவை தொடர்ந்து இப்போது கஜேஷ் வந்திருக்கிறார். இது 3வது தலைமுறை. நடிப்பு என்பது யாரும் சொல்லிக் கொடுத்து வருவதல்ல. அது பிறக்கும்போதே வர வேண்டும். கஜேசுக்கு நடிப்பு ரத்தம் ஊறியிருக்கிறது. தியேட்டருக்கு ரசிகர்களை வரவழைப்பது, ஹீரோக்களுக்கு இருக்கும் இமேஜை பொறுத்த விஷயம். என்றாலும், ரசிகர்களை தியேட்டரில் உட்கார வைக்கக்கூடிய பொறுப்பு, இயக்குனரைச் சேர்ந்த விஷயம். கஜேஷ் தன் தாத்தா நாகேஷின் கிரெடிட் கார்டையும், தன் தந்தை ஆனந்த்பாபுவின் விசிட்டிங் கார்டையும் பயன்படுத்தி முன்னேற வேண்டும்’ என்றார்

 

SHARE