கல்முனைக்குடி பள்ளிவாயலுக்கு முன்னால் இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதின!

701
DSCF5116
கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில், கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இன்று அதிகாலை (13) ஞாயிற்றுக்கிழமை 3.30 மணியளவில் பாரிய வீதிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சாய்ந்தமருதை சேர்ந்த தமீம் என்பவரின் மனைவி உட்பட அக்கரைப்பற்ரை சேர்ந்த பெண் ஒருவரும் ஸ்தலத்திலேயே மரணித்ததாகவும் கொழும்பை சேர்ந்த ஒருவர்அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானதாகவும் சுமார் 20 க்கு மேற்பட்டோர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்றும், கல்முனை வவுனியா லேலன்ட் பஸ் ஒன்றுமே நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

மேற்படி விபத்தில் இரு பஸ்களும் முன்பகுதி முற்றாக சேதமடைந்த நிலையில் உள்ளதுடன் கல்முனை வவுனியா லேலன்ட் பஸ்ஸில் சாரதியின் இருக்கைக்கு அருகில் மதுபானத்துடனான போத்தலும் காணப்பட்டது. மதுபோதையில் அந்த பஸ் சாரதி பயணம் மேற்கொண்டிருக்கலாம் என கல்முனை பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

ஸ்தலத்திற்கு விரைந்த கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.எம். கப்பார் உள்ளிட்ட குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE