கல்யாண நாளில் நடிகை ராதிகா சரத்குமார் வெளியிட்ட அழகிய வீடியோ.. குவியும் வாழ்த்துக்கள்

64

 

நடிகர் சரத்குமார் கடந்த 2001ஆம் ஆண்டு நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது இவருக்கு இரண்டாவது திருமணம் ஆகும்.

ராதிகா – சரத்குமார் ஜோடிக்கு ராகுல் என்கிற மகன் ஒருவர் இருக்கிறார். அவ்வப்போது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ராதிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது திருமண நாளை குறிப்பிட்டு தனது கணவருடன் இத்தனை ஆண்டுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வீடியோ தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.

கல்யாண நாள்
மேலும் 23 வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், ‘ஒரே தொட்டியில் இரு செடிகள்’ என்கிற சீன பழமொழியையும் பதிவு செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்களும், திரையுலக சேர்ந்தவர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை கமெண்ட்ஸில் தெரிவித்து வருகிறார்கள்.

SHARE