இன்றைய பூகோள அரசியல் சூழ்நிலையில் சீனாவின் ஆக்கிரமிப்பு என்பது இலங்கையை பொறுத்தவரையில் நீண்டகால ஒரு உத்தியாகவே அமைந்துள்ளது. குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகம், போர்ட்சிற்றி, தாமரைத்தடாகம் இன்னும் இலங்கையில் பல பாகங்கள் இரகசிய ஒப்பந்த அடிப்படையில் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகளை அடியோடு இல்லாதொழிக்க வேண்டுமாக இருந்தால் முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டளைத்தளபதி கருணா அம்மானை போர்க்களத்தில் களமிறக்குவதனூடாக இவ் விடயம் சாத்தியப்படும் என்னுமொரு நிலைப்பாட்டை இந்தியா அமெரிக்க புலனாய்வுகள் அலசி ஆராய்ந்து வந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமாக உள்ளதாக அமெரிக்க புலனாய்வு செய்திகள் மற்றும் இந்திய புலனாய்வு செய்திகள் இரகசியமாக கலந்துரையாடியிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இவற்றை அடியொட்டி பார்க்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகள் வடகிழக்கை ஆக்கிரமித்த நிலையில் சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாதிருந்த நிலையில் தற்பொழுது அது மீண்டும் இலங்கையில் தலைவிரித்தாடுகின்றது. இதனால் இந்தியா அமெரிக்கா போரியல் ரீதியிலும் அரசியல் ரீதியிலும் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏராளம்.
ஆகவே ஆயுத உதவிகளையும் பண உதவிகளையும் மருத்துவ உதவிகளையும் நவீன தொழினுட்பங்களையும் விடுதலைப்புலிகளின் முன்னாள் இராணுவ கட்டளைத்தளபதி கருணா அம்மானுக்கு வழங்குவதனூடாக ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்கி சர்வதேச ரீதியாக சீன அரசிற்கும் இலங்கை அரசிற்கும் பாரிய பின்னடைவை எதிர்நோக்கும் ஒரு சவாலாக இதனை இந்தியா அமெரிக்கா நடைமுறைப்படுத்துவதற்கு தீவிரம் காட்டிவருகின்றது. விடுதலைப்புலிகளின் போராட்டத்தை முற்றாக இல்லாதொழித்ததன் விளைவு சர்வதேச நாடுகளின் விளையாட்டு அரங்கமாக இலங்கை மாறியுள்ளது. போரியல் வரலாற்றில் 30 ஆண்டுகால அனுபவத்தை கொண்ட கருணா அம்மான் அவர்கள் தற்பொழுது அரசின் அடிவருடியாக செயற்பட்டுவருகின்றார் என்பது பலருடைய நிலைப்பாடு. அது மட்டுமன்றி ஒரு போர் வீரனை குடிப்பழக்கத்திற்கும் பெண் அடிமைக்கும் உள்ளாக்கி அவரது போர் தந்திர உபாதைகளை மலுங்கடிக்கவிட்டதாக அரசாங்கம் எண்ணிக்கொண்டிருக்கும் இந் நிலையில் இவ்வாறான செய்திகள் கசிந்துள்ளது என்பது அரச புலனாய்வாளர்களுக்கு பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. எவ்வாறு விடுதலைப்புலிகளின் ஆயுத விநியோகஸ்தர் மு.P என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அரசாங்கத்தின் தீவிர பாதுகாப்பில் இருந்துவருகின்றார். பிள்ளையானை பொருத்தவரையில் அவ்வாறான செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றவர். கருணா அம்மானை பொருத்தவரையில் அதற்கான வழங்கல் வழங்கப்படும் பொழுது கச்சிதமாக ஒரு காரியத்தை முடிப்பதில் தலை சிறந்தவராகவே விளங்குகின்றார்.
ஆகவே அவரை கண்காணித்துவரும் இலங்கை அரசு ஏதோ ஒருவகையில் அவரை கொலை செய்யவும் முயற்சிக்கும். இவ்வாறு செய்துவிட்டு முன்னாள் போராளிகள் மீது கொலை குற்றத்தை சுமத்தவும் முடியும். அல்லது பிள்ளையான் குழுவை வைத்து கருணா அம்மானை கொலை செய்வதற்கு திட்டங்களையும் வகுக்ககூடும். ஆனாலும் பாம்பின் காலை பாம்பு அறியும் என்பதுமாப்போல் ஆயுத போராட்ட கட்சிகளினதும் ஆயுத தாரிகளைப்பற்றியும் கருணா அம்மான் நன்கு அறிந்து வைத்துள்ளார். ஆகவே தான் அவர் பல்வேறு உயிராபத்துக்களில் இருந்து தன்னை இதுவரையிலும் பாதுகாத்துள்ளார். இன்றைய பூகோள அரசியலில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் தேவைப்படுவது சீனாவினுடைய இலங்கைக்கான தலையீடு என்பது முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே. அவ்வாறு இருந்தால் தான் 13ஆம் திருத்த சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்தி அதில் தான் குளிர்காய முடியும் என்பதேயாகும். பல ஆண்டுகாலமாக இலங்கையானது இந்தியாவின் நட்புறவு நாடாகவே அமைந்துள்ளது. இந்தியாவின் புலனாய்வாளராக செயற்படும் சுப்ரமணியம் சுவாமி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். அவர் ஊடாகவே இலங்கைக்கான காய் நகர்த்தல்கள் நகர்த்தப்பட்டுவருகின்றது. இருந்தாலும் சீனாவால் தமக்கு நன்மை கிடைப்பதாக இலங்கை அரசு கருதுகின்றது. பல்வேறு நாடுகளில் சதி புரட்சியை ஏற்படுத்திய அமெரிக்காவும் இந்தியாவும் தற்பொழுது சீனாவை நேரடியாக எதிர்க்க முடியாத போதிலும் இலங்கையில் ஒரு ஆயுத குழுவை உருவாக்கி அந்த ஆயுத குழுவினூடாக இலங்கை அரசிற்கு தகுந்த பாடம் புகட்டுவதற்கே தற்பொழுது இவர்களின் நடவடிக்கைகள் ஆராயப்பட்டுவருவது மட்டுமன்றி அதற்கு தகுதியான ஒருவர் என்ற அடிப்படையில் முன்னாள் விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டளைத்தளபதி கருணா அம்மானை தேர்வு செய்திருக்கின்றது. விடுதலைப் போராட்டமானது மலுங்கடிக்கப்படுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய ஒத்துழைப்பு வழங்கியதாக கம்பன்வில தெரிவித்திருந்தார். இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்கு அதன் போர் தந்திரோபாயங்களை காட்டி கொடுப்பது மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் முக்கியமான தளபதிகளையும் சுட்டுக்கொல்வதற்கும் கருணா அம்மான் காரணமாகவும் இருந்தார்.
ஆகவே அமெரிக்க இந்திய அரசியல் இராஜதந்திர நகர்வுகளை புரிந்துகொல்லாத வகையில் செயற்படுவதனுடைய அடுத்தகட்ட விளைவு என்னவென்று இலங்கை அரசு தெரியாமல் திண்டாடுகின்றது. மீண்டும் இந்த நாட்டில் ஒரு இரத்த களரியை உருவாக்குவதற்கு இலங்கை அரசு இடமளிக்கப்போகின்றதா? மறுபுறத்தில் முஸ்லிம் மக்களையும் அரசியல்வாதிகளையும் அடக்கி ஒடுக்குவதன் ஊடாக ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளினுடைய தாக்குதலுக்கும் இலக்காகும் அபாய நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அனைவராலும் செல்லாக்காசாக பார்க்கப்படுகின்ற முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ கட்டளைத்தளபதி கருணா அம்மான் அவர்களின் சுயரூபம் என்னவென்று வெளிப்படும் நிலையில் இலங்கை அரசு பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆகவே இலங்கை அரசு பூகோள ரீதியிலான பிரச்சனைகளை விரைந்து அணுகி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்கும் வகையில் இவ்வாறான ஆபத்துக்களில் இருந்து எமது நாட்டை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதே இக்கட்டுரையின் பிரதான நோக்கம்.