மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேற்றாத்தீவு பகுதியில் கொலைக்குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த ஒருவர் தோட்டம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேற்றாத்தீவில் உள்ள குறித்த நபரின் மரக்கறித்தோட்டத்திலேயே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் நஞ்சருந்தியே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த ஒரு மாதகாலத்துக்கு முன்பாக தனது மாமானார் மீது தாக்குதல் நடத்தியநிலையில் அவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் குறித்த நபரை சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டபோது அவர் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பிலான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.