களைகட்டப் போகும் சச்சின் – வார்னே டி20 போட்டி: பச்சை கொடி காட்டியது ஐ.சி.சி

360

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், வார்னே இணைந்து நடத்தும் 3 டி20 போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் இந்த தொடரில் சச்சின், வார்னே, டிராவிட், மெக்ராத், காலிஸ், கில்கிறிஸ்ட், கங்குலி, லாரா, விவிஎஸ் லட்சுமணன், வாசிம் அக்ரம் உள்ளிட்ட 26 வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்த போட்டிகளால் அமெரிக்காவிலும் கிரிக்கெட் பிரபலமடையும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் கருத்து தெரிவித்துள்ளது.

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் இந்த போட்டிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கிய போதிலும், உட்கட்டமைப்புக்கான செலவினங்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.

SHARE