கவர்ச்சி வேடம் எடுபடாததால் அப்செட்டாகி குணசித்ர வேடத்துக்கு மாறினார் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமானவர் கார்த்திகா. அடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார். தற்போது டீல், புறம்போக்கு ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார். தொடக்கத்தில் கவர்ச்சி ஹீரோயினாக முயன்ற கார்த்திகாவுக்கு அது கைகொடுக்கவில்லை. அன்னக்கொடியில் கிராமத்து பெண்ணாக நடித்தார். அடுத்தடுத்து நடிக்கும் படங்களிலும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் வேடம் ஏற்றிருக்கிறார்.
தெலுங்கிலும் ஏற்கனவே 2 படங்களில் கிளாமர் ஹீரோயினாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தார். அடுத்த படத்துக்கு எதிர்பார்த்திருந்த நேரத்தில் அல்லாரி நரேஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு தங்கையாக குணசித்ர வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வந்தவரை லாபம் என்று அந்த வேடத்தை ஏற்று நடிக்க தயாராகிவிட்டாராம்.