சன்னி லியோன் குத்தாட்டம் ரகசியமாக படமாக்கப்பட்டது.பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். தற்போது தென்னிந்திய படங்களில் இவரது பார்வை திரும்பி இருக்கிறது. தமிழில் வடகறி என்ற படத்தில் இவர் ஆடிய குத்தாட்ட பாடல் இடம்பெற்றது. இதையடுத்து தெலுங்கில் கரன்ட் தர் தீகா என்ற படத்துக்கு ஆடிய குத்தாட்ட பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. தற்போது கன்னடத்தில் டிகே என்ற படத்திற்காக குத்தாட்ட பாடல் காட்சியில் ஆட ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதற்கான ஷூட்டிங் திங்கட்கிழமை நடந்தது.
இதுபற்றி பட டைரக்டர் உதய பிரகாஷ் கூறும்போது,கடந்த 3 நாட்களாக சன்னி லியோன் எங்களது ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார். இவர் பங்கேற்கும் பாடல் காட்சிக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. சேஷம்மா சேஷம்மா என்ற இந்த குத்து பாடலுக்கு அவர் கவர்ச்சியாக நடனம் ஆடினார். இதற்கான படப்பிடிப்பு ரகசியமாக நடத்தப்பட்டது. சன்னி லியோன் ஷூட்டிங்கில் இருப்பதை மக்களின் கவனத்தை இழுக்க பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றார்.