தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் வரை கொடிகட்டி பறப்பவர் ஸ்ருதிஹாசன். அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் மார்க்கெட் உச்சத்தை தொட்டுவிட்டதாம்.
இதற்கு முக்கிய காரணம் இவர் நடித்த பல்பு, கப்பர் சிங், ரேஸ்குராம் போன்ற படங்கள் ஆந்திர பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பியதாம். மேலும் இவரது கவர்ச்சியான தோற்றம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.
இதை உண்மையாக்கும் பொருட்டு தெலுங்குத் திரையுலகமான டோலிவுட்டின் ‘தங்க மகள்’ ஆக ஸ்ருதிஹாசன் முதலிடத்தில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமன்னா 2வது இடத்திலும் ஸ்ரேயா மூன்றவாது இடத்திலும் தேர்வாகியிருக்கிறார்கள்.
ஆந்திராவிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று ஆன்லைன் வாக்குப் பதிவு மூலம் இதைத் தேர்வு செய்திருக்கிறது.