காஃபியிலும் இப்போது செல்பி வரையலாம்

183

நமக்கு பிடித்தவர்கள், நண்பர்களின் புகைப்படத்தினை Cup, T-Shirt போன்றவற்றில் பதிந்து அவர்களுக்கு ஆச்சரிய பரிசாக வழங்குவோம்.

இதே போன்று தற்போது காபியில் நமது புகைப்படத்தினை வரையும் மெஷின்(Machine) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன் பெயர் ரிப்பிள் மேக்கர்(Ripple Maker).

இந்த ரிப்பிள் மேக்கர் மூலமாக நாம் விரும்பும் புகைப்படத்தினை காபியின் மேற்புறத்தில் வரைந்து நம் விருப்பமானோர்க்கு கொடுக்க இயலும்.

4.25இன்ச் உள்ள காபி கோப்பையின் அளவை அதுவாக கணித்து அதன் மேல் பிரிண்ட் செய்யுமாறு இந்த இயந்திரமானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரம் 210மிமீ அகலம், 270மிமீ ஆழம், 495மிமீ உயரம், 16கிலோகிராம் எடை கொண்டதாக வை-பை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வை-பை வசதி மூலமாக நாம் விரும்பும் புகைப்படங்களை இயந்திரத்திற்கு அனுப்பி காபியின் மீது வரைய இயலும்.

Ripple Maker இயந்திரத்திற்காக தனியாக ஆப்(Apps) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி நாம் இருக்கும் இடத்திற்கு அருகேயுள்ள காபி ஷாப்பினை அறிய இயலும்.

இந்த சேவையானது தற்போது அமெரிக்கா, சீனா, கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மட்டுமே உள்ளது.

SHARE