காணாமற்போனவர்கள் அலுவலகத்தை மாத்தறையில் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை

912

காணாமற்போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை மாத்தறையில் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையை இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோம்ஸ் டோறிஸ் பாராட்டியுள்ளார்.

காணாமற் போனவர்களின் குடும்பத்தவர்களுக்கு மாத்திரமன்றி முழு இலங்கைக்கும் தேவையான நடவடிக்கையாக இதனைக் கருத முடியும் என்று அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அந்தப் பதிவில் அலுவலகத்திற்குத் தேவையான ஒத்துழைப்பை கட்சிகள் வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

SHARE