கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும் நடைபெற்ற எந்தப் போராட்டங்களாக இருந்தாலும் சரி அதனை மிகக் கச்சிதமாக வன்னியில் இருந்து செயற்படுத்தியவர் தான் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள். இவருக்கு உதவியாக சன் மாஸ்ரர் என்பவர் செயற்பட்டுக்கொண்டிருந்தார். வடக்கிலும், கிழக்கிலும் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சிறந்த ஒரு இணைப்பாளராக சன் மாஸ்ரர் அவர்கள் திகழ்ந்தார். அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட எம்.பி சிவசக்தி ஆனந்தன் எல்லாளன் படை, குளக்கோட்டன் படை, மக்கள் படை, சமூக அமைப்புக்கள் என்று அமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டு போராட்டங்களை சிறந்ததொரு நிலைக்குக்கொண்டு சென்றார். இப்போராட்டம் காலப்போக்கில் வலுவிழந்துபோக தாமாகவே இப்போராட்டங்களில் இருந்து விலகிச் சென்றார்.
முதன்முதலாக மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் அஞ்சலி நிகழ்வை செவ்வனவே நிகழ்த்திக்காட்டியவர் எம்.பி சிவசக்தி ஆனந்தன் அவர்கள்தான். வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்துவதற்கு நானா? நீயா? என்று போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றனர் இந்த நல்லாட்சியில். எம்.பி சிவசக்தி ஆனந்தனது கைக்கூலிகளாக செயற்பட்டுவந்தவர்களே தற்போது வடக்கிலும், கிழக்கிலும் ஏனைய மாவட்டங்களிலும் காணாமல் போனவர்களது ஆர்ப்;பாட்டங்களை முன்னகர்த்தி வருகின்றார்கள்.
யார் யார் எம்.பி சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் இணைந்து செயற்பட்டார்கள் என அனைத்து ஆதாரங்களும் இருக்கிறது. இங்கு இதுவல்ல முக்கியம். இந்த மக்களுக்கானத் தீர்வினை எந்த வகையில் பெற்றுக்கொடுக்கலாம் என எம்.பி அவர்கள் சிந்தித்து முடிவு எடுக்கவேண்டும். காரணம் இவரால்தான் இந்தப்போராட்டங்கள் உருவாக்கிவைக்கப்பட்டது. இப்போராட்டங்கள் தன்னால் உருவாக்கப்படவில்லை என்று எம்.பி சிவசக்தி ஆனந்தன் அவர்கள் பகிரங்கமாக அறிக்கை விடுவாராக இருந்தால் அதனையும் எதிர்கொள்ளத் தயார். கூறுவது உண்மை. இதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. அதற்காக எம்.பி சிவசக்தி ஆனந்தனுடைய செயற்பாடுகளைப் பாராட்டாமலும் இருக்கமுடியாது. இவ்வாறான போராட்டங்களை ஒரு ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை முன்னெடுத்துச் சென்றமையின் காரணமாக இவர்களுடன் இணைந்து செயற்படக்கூடாது என ஏனைய கட்சிகள் முரண்படுகிறார்கள். இதற்காக அப்பாவி மக்களைப் பலிக்கடாவாக்கக்கூடாது. கடத்தப்பட்டு, காணாமல்போனவர்களில் சிலரது விபரங்கள் எம்மிடம் இருக்கிறது. தற்போது இதனது தேவை கருதியே நாம் இப்பட்டியலை வெளியிடுகின்றோம். இது பாராளுமன்ற உறு;ப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் தெரியும். உண்மையில் இப்பட்டியலில் உள்ளவர்களின் உறவினர்கள் அனைவரும் இப்போராட்டங்களில் ஈடுபடவில்லை. குறிப்பிட்ட சில உறவுகளே இப்போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர். பெயர் பட்டியல் விபரத்தையும் நாம் தருகின்றோம். அதனைப்பார்த்தாவது அனைவரும் போராட முன்வரவேண்டும். குறிப்பிட்ட சிலரே இப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர. மீண்டும் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் இப்போராட்டத்தை நெறிப்படுத்தவேண்டும். போராட்டத்திற்கான பணம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்படுகிறது. அதனையும் ஆரம்பத்தில் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கினார். கட்சி பேதங்களை மறந்து விடுதலையைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
கடத்தப்பட்டு காணாமல் போனோர்களில் சிலரது பெயர் பட்டியல் விபரங்கள் வருமாறு:
01. சாஸ்திரிகூலாங்குளம் தங்கவேல் செந்தமிழ்நாதன் 601, மறவங்குளம்
சாஸ்திரிகூலாங்குளம் 01.01.1997
02. சாஸ்திரிகூலாங்குளம் கந்தசாமி திருக்குமரன்
203,16வது ஒழுங்கை, சாஸ்திரிகூலாங்குளம் 01.01.2009
03. சாஸ்திரிகூலாங்குளம் தனபாலசிங்கம் தனுசன 207இ 16வது ஒழுங்கை,
சாஸ்திரிகூலாங்குளம் 20.02.2009
04. சாஸ்திரிகூலாங்குளம் வைத்தியலிங்கம் செந்தில்வேல் 667இ மறவங்குளம்
சாஸ்திரிகூலாங்குளம் 10.03.2003
05. சாஸ்திரிகூலாங்குளம் வெள்ளிசாமி கிருஸ்ணகுமார் சுந்தரபுரம்,
சாஸ்திரிகூலாங்குளம் 15.12.2008
06. சாஸ்திரிகூலாங்குளம் செல்வராஜ் சுகந்தன் 44இகறுவேப்பங்குளம்,
சாஸ்திரிகூலாங்குளம் 17.12.2014
07. சாஸ்திரிகூலாங்குளம் ஜெயசீலன் ஜீவன் 75இ மறவங்குளம்
சாஸ்திரிகூலாங்குளம் 13.05.2006
08. சாஸ்திரிகூலாங்குளம் மாரிமுத்து கந்தவேல் 1வது ஒழுங்கை,
சாஸ்திரிகூலாங்குளம் 09.05.2007
09. சாஸ்திரிகூலாங்குளம் ராசைய்யா திருச்செல்வம் சாஸ்திரிகூலாங்குளம்
வவுனியா. 27.03.2008
10. சாஸ்திரிகூலாங்குளம் சங்கரப்பிள்ளை ரதன் பெரியகுளம் வீதி,
சாஸ்திரிகூலாங்குளம் 12.02.2009
11. சாஸ்திரிகூலாங்குளம் மார்க்கண்டி சிவஞானம் கஜுரி,
சாஸ்திரிகூலாங்குளம் 05.02.2009
12. சாஸ்திரிகூலாங்குளம் பூலோகசிங்கம் மகேஸ்வரன் சாஸ்திரிகூலாங்குளம்,
வவுனியா. 20.03.2003
13. சாஸ்திரிகூலாங்குளம் தாஸ் ஜெகன் 319, 18வது ஒழுங்கை, தரணிகுளம். 12.03.2005
14. சாஸ்திரிகூலாங்குளம் சுஜம்பு சிறீதரன், சாஸ்திரிகூலாங்குளம்
வவுனியா. 23.02.1989
15. சாஸ்திரிகூலாங்குளம் கந்தசாமி பார்த்தீபராஜன் சாஸ்திரிகூலாங்குளம்
வவுனியா.
16. சாஸ்திரிகூலாங்குளம் அன்ரன்ஜோசப் சிதம்பரம் கிடாச்சூரி,
சாஸ்திரிகூலாங்குளம்
வவுனியா.
17. சாஸ்திரிகூலாங்குளம் அருணகிரிநாதன் கிறிஸ்ணவேனி சாஸ்திரிகூலாங்குளம்,
வவுனியா. 16.12.2014
18. சாஸ்திரிகூலாங்குளம் பொன்னுசாமி சுதாகரன் சாஸ்திரிகூலாங்குளம்,
வவுனியா. 01.08.2013
19. சேமமடு மகேந்திரன் ஜெயந்தன், 159, ஓமந்தை,
சேமமடு.
20. சேமமடு பாலக்கிருஸ்ணன் கிருஸ்ணக்குமார் 119, 2ஆம் யுனிட்,
சேமமடு. 05.05.1999
21. சேமமடு பாலக்கிருஸ்ணன் சாந்தினி
119, 2 ஆம் யுனிட்,
சேமமடு. 05.05.2000
22. சேமமடு சாந்தகுமார் தனுராஜ்
75, மன்னார்வீதி,
3ஆம் ஒழுங்கை,
கற்பகபுரம். 01.01.2013
23. சேமமடு டெலஸ்பரி றேமிங்டன் 71யுஇ 3வது ஒழுங்கை,
கற்பகபுரம். 16.12.2014
24. சேமமடு ஆறுமுகம் விஜயகுமார உபதபால்கந்தோர்,
பம்பைமடு. 01.01.2005
25. றம்பைக்குளம் திருச்செல்வம் ரெஜினோல்ட் நிர்மலன்
26. றம்பைக்குளம் கைலாசப்பிள்ளை ராமைய்யா
கந்தசாமி கோவில்வீதி,
வவுனியா.
27. பட்டனிச்சிப் புளியங்குளம், நடராசா சிவரூபன்
6F/21, 6வது ஒழுங்கை,வேப்பங்குளம், வவுனியா. 01.01.2006
28.பட்டனிச்சிப்
புளியங்குளம் கந்தசாமி தர்சன்
35/14 இ வேப்பங்குளம்,
வவுனியா. 01.01.2006
29.பட்டனிச்சிப்
புளியங்குளம் கந்தைய்யா ஜெயதாஸ்
365/14,மன்னார்வீதி
வேப்பங்குளம்,
வவுனியா. 01.01.2009
30.பட்டனிச்சிப்
புளியங்குளம் அருந்தவராசலிங்கம் சுஜாகரன்
31/1வது ஒழுங்கை,
பட்டாணிச்சூர்,
வவுனியா. 01.01.2009
31.பட்டனிச்சிப்
புளியங்குளம் வேல்முருகு விவேகநாதன்
347,மன்னார்வீதி
வேப்பங்குளம்,
32.கந்தபுரம் தவராசா சுரேஸ்
மேட்டுத்தெரு,
தவசிகுளம், வவுனியா. 29.04.2009
33.கந்தபுரம் செல்லத்துரை சித்திரவேல் 23,பாலவிநாயகர் ஒழுங்கை, தவசிகுளம் 25.08.1997
34.கந்தபுரம் தேவதாஸ் வினோதன் 18இ 6ஆம்ஒழுங்கை,
பாலவிநாயகர்வீதி 15.05.2008
35.கந்தபுரம் பெருமாள் கிருஸ்ணசாமி
58,கண்டிவீதி, தவசிகுளம். 03.08.1990
36.மரக்காரம்பளை கந்தசாமி விக்னேஸ்வரன் பாலர் பாடசாலை,
மரக்காரம்பளை,
வவுனியா 01.01.2009
37.மரக்காரம்பளை திலகநாதன் நந்தினி; மணிப்புரம்,
வவுனியா. 01.01.2005
38.மரக்காரம்பளை கதிர்சன் கிருபாகரன்
மணிப்புரம்,
வவுனியா. 27.11.2009
39.ராசேந்திரகுளம் ரஞ்சணமூர்த்தி செல்வநாதன் காமென்ட் ஒழுங்கை,
விநாயகபுரம்,
வவுனியா. ————–
40.ராசேந்திரகுளம் வீரசாமி நிர்மலதேவி
18,விநாயகபுரம்,
வவுனியா. 19.03.2009
41.ராசேந்திரகுளம் மகேந்திரன் மதனகாசன் ராசேந்திரகுளம்
வவுனியா. 26.02.2007
42.நெலுக்குளம் ராசநாயகம் இளங்கீரன் 89ஃ1இநெலுக்குளம்,
வவுனியா. 15.12.1996
43.நெலுக்குளம் பாலசுந்தரம் அரவிந்தன் 51ஃ11இ 7ஆம் ஒழுங்கை,
ஊர்மிலக்கோட்டம்,
நெலுக்குளம். 01.04.1997
44.நெலுக்குளம் கதிரவேலு ரட்ணராஜா
22.ஊர்மிலக்கோட்டம்,
நெலுக்குளம். 21.07.1990
45.வைரவப்புளியங்குளம் ராஜலிங்கம் நகுலேஸ்வரன்
29/24A,குளக்கட்டுவீதி,
வைரவப்புளியங்குளம்.
06.06.2009
46.வைரவப்புளியங்குளம் செல்லைய்யா செல்வராஜா
19A,பண்டாரிகுளம்வீதி,
வவுனியா. 26.10.2004
47.வைரவப்புளியங்குளம் சுப்பிரமணியம் ராஜகுலசிங்கம்
33B,ரசபை விடுதி,
மன்னார்வீதி. 01.03.2009
48.வைரவப்புளியங்குளம் அனந்தகுரு ஜெயராம் 37இகரப்பங்காடு,
வைரவப்புளியங்குளம்.
49.வைரவப்புளியங்குளம் ஆறுமுகம் அகதீஸ்வரன்
33. நகரசபை விடுதி, மன்னார்வீதி.
50.மருதமடு பாலச்சந்திரன் சிவபாலன் நெல்வேலிக்குளம்,
மருதமடு, வவுனியா. 22.03.2008
வடக்குக் கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் போனோரது விபரங்களைத் தினப்புயல் ஊடகம் உத்தியோகபூர்வமாக வெளியிடுகின்றது. அதில் ஒரு கட்டமாக இதனை நாம் பிரசுரித்துள்ளோம். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் உண்மையில் காணாமல் போனோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளோ, தீர்வுகளோ இன்றி குறித்தக் குடும்பங்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல்வாதிகளும் இந்த மக்களுக்கானத் தீர்வு தொடர்பில் கண்களை மூடிக்கொண்டிருப்பது கவலையைத் தருகின்றது. எப்போது காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதனைக்கூட அறியாதவர்களாக இவர்கள் செயற்படுகின்றார்கள்.
மேலும் 2009ஆம் ஆண்டிற்கு பின்னரும் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டோரது விபரங்களும் உண்டு. அதனையும் நாம் வெகுவிரைவில் வெளியிடுவோம்.
சிவசக்தி ஆனந்தனும்(MP),சன்மாஸ்டருமே
இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடமாகாண சபையினாலும் ஜனநாயகப் போராளிகளினாலும், பல்கலைக்கழக மாணவர்களாலும் ஒழுங்கமைக்கப்பட்டு நிகழ்த்தப்பட்டவொன்று. இதைவிடவும் பலருடைய பங்களிப்பு இதில் இடம்பெற்றுள்ளது. யுத்தம் முடிவடைந்த கணப்பொழுதிலிருந்து அல்லது அதற்கு முன்னான காலப்பகுதியிலும் சன்மாஸ்டர் அவரோடு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குரிய தீர்வினைக் கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும், பல நினைவேந்தல் நிகழ்வுகளையும் ஒழுங்கமைப்புச் செய்து, பலத்த எதிர்ப்புக்கள் மத்தியிலும் அதனை திறம்பட செயற்படுத்தி வந்தனர். ஒரு அரசியல் பின்புலம் இல்லாது தனியே மாணவர்களாலோ அல்லது பொது அமைப்புக்களாலோ இந்நிகழ்வுகளை நடத்தமுடியாது என்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சிறந்த உதாரணமாவார்.
அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், காணி அபகரிப்பு, திட்டமிட்ட புத்தர் சிலை நிறுவுதல் தொடர்பான ஆர்ப்பாட்டம் இதுபோன்று பல்வேறு தரப்பிலான ஆர்ப்பாட்டங்கள் சன்மாஸ்டரால் நடாத்தப்பட்டது. இதன் காரணத்தால் அவர் நாட்டைவிட்டே தலைமறைவாகும் சூழலும் ஏற்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, புளொட், ஈபி.ஆர்.எல்.எப் என்று தமிழ் தரப்பில் எந்த அமைப்பாக இருந்தாலும் சன்மாஸ்டருடைய அணுகுமுறை என்பது ஓர் காத்திரமான செயற்பாடாகவே இருந்தது. தற்போது இருக்கக்கூடிய அரசியல்வாதி சுமந்திரனைத் தவிர ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சன்மாஸ்டருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தனர். ஒரு சிலர் அவருடன் கருத்து முரண்பாட்டிலே ஈடுபட்டாலும் தமிழ் மக்களுக்கு எதிராக வடக்குக் கிழக்கில் அநீதிகள் எழும்போதெல்லாம் சன்மாஸ்டரின் குரலொழிப்பு குறையவே இல்லை.
வடக்கிலும் கிழக்கிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் 2500 ஆவணங்களை சன்மாஸ்டர் அப்போது ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த நவநீதம்பிள்ளையிடம் கையளித்திருந்தார். இது அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியைக் கொடுத்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடைய செயலாளர் நாயகம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே இதை ஒப்படைப்பதாகவிருந்தது. மேலும் அனந்தி சசிதரன் அவர்களும் கூடிய கவனம் செலுத்தினர். ஆனாலும் சன்மாஸ்டர் அவர்களே மிக வெற்றிகரமாக செயற்பட்டு இவ் ஆவணங்களை நவநீதம்பிள்ளையிடம் கையளித்தார். இவர் சமூக செயற்பாட்டாளராகவே மக்கள் மத்தியில் வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தொடர்பில் மக்கள் மத்தியிலே இவர் புலனாய்வாளருடன் இணைந்து செயற்படுகிறாரா என்று சந்தேகம் எழுந்த போதிலும் சன்மாஸ்டர் ஒரு காலத்திலும் அரசுக்கு விலை போகவில்லை.
எல்லாளன், குளக்கோட்டன், மாணவர் இயக்கம், வன்னி ஊரான், இப்படி பல அமைப்புக்களை ஆங்காங்கே இயக்கி வைத்து அதனூடே தனது செயற்பாடுகளை இரகசியமாக நடத்திவந்தார்.
சன்மாஸ்டர் அவர்கள் இந்நாட்டை விட்டுசெல்ல பிரதான காரணம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களினது கட்சியே. காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய விபரங்களை வன்னிப் பிராந்தியத்தில் கையளிக்கையில் அதில் ஒருநபர் இராணுவப் புலனாய்விடம் மாட்டிக் கொள்கையில் யார் இதனுடன் தொடர்புடையவர் என்பதை இராணுவப் புலனாய்வு அலசி ஆராய்ந்து கண்டறிந்தது. இதன் சூத்திரதாரி கஜேந்திரகுமார் பொன்னம்பலமே. இதில் சன்மாஸ்டரும் தொடர்புபட்டிருந்தார், ஆனால் இறுதியில் நிகழ்ந்தது என்னவெனில் சன்மாஸ்டரே சூத்திரதாரி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இராணுவப் புலனாய்வாளர்களிடம் கூறி, சன்மாஸ்டர் இராணுவப் புலனாய்வாளர்களால் தேடப்பட்டு வந்தார்.
பின்னர் ஏதோ ஓர் வகையில் சன்மாஸ்டர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்று விட்டார். அவரது மனைவியும் பிள்ளைகளும் மாத்திரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அகப்பட்டனர். இவ்வாறு சன்மாஸ்டரது செயற்பாடுகள் பலவுண்டு. அதை நாம் பாதுகாப்புக் கருதி வெளியிடவில்லை.
எந்தெந்த அரசியல்வாதிகள் சன்மாஸ்டருடன் என்னென்ன விடயங்களைக் கலந்தாலோசித்தனர் என்று அனைத்து தகவல்களும் எம்மிடம் உண்டு. எனினும் ஊடக தர்மம் கருதி அதனை நாம் வெளியிடவில்லை. இதனை நாம் கூறுவதன் தற்போதைய தேவை என்னவென பலர் கேள்வி எழுப்பக்கூடும்.
சர்வதேச ரீதியிலே தமிழ் மக்களது பிரச்சினைகளைக் கொண்டு சென்றதில் பிரதானமானவர் சன்மாஸ்டர். இவருடன் இணைந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கள உதவி மற்றும் பண உதவிகளை செய்திருந்தார். இக்கால கட்டங்களில் ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்த யாருமே முன்வரவில்லை. மஹிந்தவின் ஆட்சியில் யுத்தம் முடிந்ததன் பின்னர் எந்தவொரு அரசியல்வாதிகளுமே ஆர்ப்பாட்டங்களையோ, போராட்டங்களையோ என்று எதனையுமே முன்னெடுத்து நடத்தவராத காலகட்டத்தில் சிவசக்தி ஆனந்தனது(ஆP) பங்கும் சன்மாஸ்டரது பங்கும் இங்கு பிரதான இடம் பிடித்திருந்தது.
சிவசக்தி ஆனந்தனைப் பொறுத்தவரையில் அவர் ஓர் மாற்றியக்கமாக இருந்தார். தமிழ் மக்களின் உணர்வுகளை நன்கறிந்தவராக முன்னின்று செயற்படக் கூடிய பல வீரர்களை பின்புலத்தினின்று இயக்கிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக 4ஆம் மாடிக்கு அரச புலனாய்வாளர்களால் அழைக்கப்பட்டு விசாரனைக்கும் உள்ளாக்கப்பட்டார்.
மைத்திரியினது நல்லாட்சி அரசாங்கம் அது தனது பிடிகளைத் தளர்த்தியுள்ள நிலையில், தற்போது இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் என்னவென்றால் தற்போதைய அரசுக் கெதிராகப் போர்க்கொடி தூக்கிக்கொண்டு தம்மைப்போல் யாரும் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என்று கோசம் போட்டுக்கொண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையும் மேலும் பல போராட்டங்களையும் நடத்துகின்றார்கள் .
சுயாதீன அரசாங்கம் தனது பிடிகளை தளர்த்தியுள்ள நிலையில் அதில் நானா நீயா என போட்டி போடும் நிலையில், இராணுவ புலனாய்வாளர்களது கெடுபிடிகளினைக் கடந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வவுனியா கலாசார மண்டபத்தில் நிகழ்த்திக் காட்டியவர்கள் தான் இவர்கள் இருவரும். அக்காலகட்டத்திலே குறித்த அரசியல்வாதிகள் அனைவரும் இப்படிப்பட்ட நிகழ்வுகளுக்கு வருவது என்பதே அரிது; அவர்கள் ஓடியொழித்த வரலாறுகளே அதிகம். அரச கட்டுப்பாடுகளையும் மீறி தமிழ் மக்களுக்கான எழுச்சிப் போராட்டங்களை நடத்தியோர் என்கின்ற பெருமை சன்மாஸ்டரையும், சிவசக்தி ஆனந்தனையுமே சாரும்.
அன்று ஒழுங்கமைப்பு செய்கையில் குறித்த அரசியல்வாதிகளும், பல்கலைக்கழக மாணவர்களும் என்ன செய்து கொண்டிருந்தனர்? அவர்கள் ஏன் முன்வரவில்லை? ஆனால் இன்று ஓர் அரசியல் எழுச்சி நிகழ்வினையோ இல்லையேல் நினைவு கூர்தல்களையோ நடாத்துகையில் மாத்திரம் அதற்கு நாங்கள் தான் பொறுப்பு என ஒவ்வொரு கட்சிகளும், குழுக்களும் பங்களிக்க முன்வருகின்றது.
சிங்கள தேசத்தைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களிடையே உடைவுகளை ஏற்படுத்த அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது. சுயாதீனமாக செயற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களது ஒற்றுமையைக் காண்பிக்க வேண்டும்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது கட்சிகளுக்கு அந்த சுற்றுவட்டப் பகுதிகளில் அனுமதியில்லை என்று பல்கலைக்கழக மாணவர்களாலும், ஏற்பாட்டாளர்களாலும் கூறப்பட்டிருந்தது. இது மிகத் தவறானதொரு விடயமாகும். அரசியல்வாதிகள் பின்புலத்தில் இல்லையென்றால் எந்தவொரு தனிநபர் அமைப்புக்களாலும் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லமுடியாது. அன்று ஒரு சிவசக்தி ஆனந்தன், சன்மாஸ்டரது கரங்களை பலப்படுத்தாது போயிருந்தால் இவ்வாறான நிகழ்வுகளை இன்றுவரைக் கூட நிகழ்த்த முடியாதே போயிருக்கும்.
குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டம் இன்றும் இலங்கையில் இருக்கின்ற போது விடுதலைப் புலிகளது அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் ஓர்கட்சி உருவாகி செயற்பட அரசாங்கம் எவ்வாறு இடம் அளித்தது எனும் கேள்வி ஒருபக்கமிருக்க, இவர்களின பின்புலத்தில்;; அரசாங்கம் இருந்து செயற்படுகின்றது என்பது நன்கு தெளிவாகின்றது.
ஜனநாயக போராளிகளின் ஊடகப் பேச்சாளர் துளசி புலனாய்வாளரா? புலியா? என்பது பற்றி மக்கள் அறிவார்கள். சுமந்திரனை காக்கா பிடித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைந்தாரென்பது ஒரு கதை. எந்தவொரு கட்சியாக இருந்தாலும் அதன் அரசியல் யாப்பு இலங்கை அரசின் சட்டதிட்டத்திற்கு அமையவே இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்தக் கட்சி அந்த நாட்டில் இயங்க முடியாது. அவ்வாறு இயங்கினால் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டது போன்று ஏனையவர்களும் முத்திரை குத்தப்படுவார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்நாட்டிலுள்ளவரை விடுதலைப்புலிகளின் பெயரை வைத்து எந்தவொரு கட்சி ஆரம்பிக்கப்பட்டாலும் அது புலனாய்வாளர்களது பின்புலத்துடனேயே நிறுவப்பட்டது என்பது உறுதி. சுயாதீனமான போராளிகளை சன்மாஸ்டர் இயக்கியதன் விளைவாக இன்று அவர் தலைமறைவாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேச ரீதியில் இயங்கிக் கொண்டிருந்த பொழுதும் அது இலங்கையில் இயங்கத் தடை. அதுவே இன்று இருக்கக் கூடிய உருத்திரகுமார் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசு. இந்த தடை உத்தரவு எடுக்கப்படுமாகவிருந்தால் வடக்கிலும் கிழக்கிலும் 24 மணிநேரங்களில் தமது காரியாலயங்களை நிறுவி சிறந்தவொரு சிவில் நிர்வாகத்தை நடாத்தக்கூடிய அனைத்து அதிகாரத்தையும் இவர்கள் கொண்டிருக்கின்றார்கள். நாடுகடந்த தமிழீழ அரசை அரசாங்கம் உள்வாங்கிக் கொள்ள முயற்சிகள் எவ்வளவு எடுத்துக் கொண்டாலும் அது இன்றுவரை சாத்தியமாகவில்லை.
அப்படியிருக்க இன்று பகிரங்கமாக விடுதலைப்புலி என்று கூறிக்கொண்டு இயங்கும் இவர்கள் இராணுவ புலனாய்வாளர்களது தலையீடு இன்றி இயங்க இயலாது. பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்வுகளை நடாத்துவதென்பது தலை சிறந்தது தான். இவர்கள் எந்தவொரு ஆயுதப் பின்னணியும் இன்றி செயற்படுவது மக்களால் வரவேற்கப்படத்தக்கது. இவர்கள் அரசியல் கட்சிகளின் பங்களிப்பின்றி செயற்படுவதே சிறந்ததாகும்.
மன்னார் புதைகுழி விவகாரம் இதனை சன்மாஸ்டரே முதலில் ஆரம்பித்து வைத்தார். அதுவும் இடைநடுவில் கைவிடப்பட்டது. இவ்வாறு சன்மாஸ்டரும், சிவசக்தி ஆனந்தனும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வு கானவென பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவை முடக்கப்பட்டாலும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்தே வந்தனர். அது மட்டுமல்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு இடம்பெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான பல ஆவணங்களையும் முன்வைத்தார்.
சன்மாஸ்டர் இராணுவ புலனாய்வாளர்களால் தேடப்பட்டு கொலை செய்ய திட்டமிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் தமக்கு சன்மாஸ்டரைத் தெரியாது என்றே கூறிவிட்டனர். சன்மாஸ்டருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்களில் ஒருவராயினும் தமக்கு சம்பந்தமில்லை என்று கூறுவார்களாயின் அவர்களுக்கு நாம் தங்கப் பதக்கம் வழங்கத் தயாராகவுள்ளோம்.
தற்போதைய சமாதான சூழ்நிலையில் வாய்வீரம் பேசுகின்ற அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி சன்மாஸ்டருடைய செயற்பாடுகள் போன்று நீங்கள் யாராவது செயற்படுவீர்களாக இருந்தால் அது வரவேற்கப்படத்தக்கது. வெறுமனே வாய்வீரம் பேசுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆகவேதான் ஆரம்ப கட்டத்தில் நான் கூறியது போன்று முள்ளிவாய்க்கால் யுத்த சூனிய சூழ்நிலையில் சன்மாஸ்டரை வைத்து முழு அளவிலான செயற்பாடுகளை செயற்படுத்தியதன் பிரதிபலிப்பே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அத்தகையதொரு செயற்பாட்டிற்கு முழுவடிவம் கொடுத்ததால் தான் இன்றும் அவர் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை துணிந்து முன்னெடுத்துக்கொண்டிருக்க காரணமாக அமைந்தது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
யுத்தத்தின் பின்னர் பல புரட்சியாளர்களை வளர்துவிட்ட பெருமை சிவசக்தி ஆனந்தனையும் சன்மாஸ்டரையுமே சாரும்.
இராணுவப்புலனாய்வாளர்களின் கெடுபிடிக்கு மத்தியில் ஒரு நிகழ்வினை நடாத்தி முடிப்பதென்பது சாதாரண விடயமல்ல. இன்று வாய்வீரம் பேசுகின்ற ஒருவரேனும் சன்மாஸ்டர் பற்றி யோசித்ததுண்டா? யார் இந்த சன்மாஸ்டர்?…
(இன்னும் பல அதிர்ச்சியான தகவல்களுடன்)
தொடரும்…
Edit