காணாமல் போனோர் எனக் கூறப்படும் பலர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐரோப்பாவில் வாழ்கின்றனர்

443

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் ஐரோப்பாவில் புகலிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக சிலுமின என்ற சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில் கிழக்கில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பலர் இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு இரகசிய வழிகளில் தப்பிச் சென்றுள்ளனர்.

வடக்கு கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இதுரையில் சுமார் 20,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கடும் அழுத்தம் காரணமாகவே இவர்கள் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கனடா, பிரிட்டன், நோர்வே போன்ற நாடுகளில் அரசியல் புகலிடம் கோரியுள்ளனர்.

இரகசியமாக தமிழகத்திற்கு கடல் வழியாக சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்த பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் போரின் போது வடக்கு, கிழக்கில் காணாமல் போனோர் என்று கூறப்படும் பலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ன் ஆதரவுடன் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வருவதாக இலங்கையின் அரசாங்க சிங்கள இதழான சிலுமின தெரிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிவடைந்ததாக அரசாங்கம் கூறியதில் இருந்து( ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்ததில் இருந்து) ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கம் ஆரம்பம் முதலே காணாமல் போனோர் எனக்கூறப்படும் பலர் ஐரோப்பிய நாடுகளில் வாழ்வதாக கூறிவருகிறது.

அண்மையில் காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவரும் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் கண்டித்திருந்தது.

இந்தநிலையில் சிலுமின தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஆதரவுடன் குறித்த காணாமல் போனோர் என்று கூறப்படுவோர் ஐரோப்பிய நாடுகளில் வசிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது.

 

SHARE