நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் இந்திய அளவில் பாப்புலரான நடிகை தான். தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகையாக இருப்பது மட்டுமின்றி, சோலோ பாடல்கள் மூலமாகவும் அவர் பாப்புலராகி வருகிறார்.
சமீபத்தில் அவரது ‘இனிமேல்’ என்று பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது. அதில் ஸ்ருதி ஜோடியாக லோகேஷ் கனகராஜ் ரொமான்ஸ் காட்சிகளில் நடித்து இருந்தார்.
பிரேக்கப்
ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த சாந்தனு ஹசாரிகா என்பவரை தற்போது பிரேக்கப் செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
சாந்தனுவை இன்ஸ்டாவில் unfollow செய்திருக்கும் ஸ்ருதி, அவரது போட்டோக்களையும் நீக்கிவிட்டார். அதனால் அவர்கள் பிரேக்கப் உறுதியாகி இருப்பதாக தெரிகிறது.
ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் பரவியது. ஆனால் அது முற்றிலும் வதந்தி என ஸ்ருதி ஹாசன் விளக்கம் கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.