இலியானாவின் காதலன் நடிகர் ஆனார். நண்பன், கேடி படங்களில் நடித்தவர் இலியானா. தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்த இவர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில வருடமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நிபோனுடன் நெருங்கிய நட்புடன் இருந்து வருகிறார். அடிக்கடி இருவரும் நட்சத்திர ஓட்டலுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர். தற்போது ஹேப்பி என்டிங் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார் இலியானா. இப்படத்தின் ஷூட்டிங் லாஸ் ஏஞ்சலஸில் நடந்து வருகிறது. அடிக்கடி இலியானாவை சந்திக்க ஆண்ட்ரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து செல்கிறார்.
அங்கு பணிபுரிபவர்கள் மற்றும் டைரக்டரிடம் ஆண்ட்ரு சகஜமாக பழகினார். இது அவர்களை கவர்ந்தது. ஒரு காட்சியில் நடிக்க புதுமுக நடிகர் தேவைப்பட்டார். அதில் ஆண்ட்ருவை நடிக்க வைக்க முடிவு செய்தார் இயககுனர். இதுபற்றி அவரிடம் சொன்னதும் உடனே நடிக்க ஒப்புககொண்டார் ஆண்ட்ரு.
பாத்திரத்துக்கு ஏற்ப நடித்து அனைவரிடமும் பாராட்டு பெற்றார். ஆண்ட்ருவுக்கு, இலியானா நடிப்பு பற்றி டிப்ஸ் கொடுத்தார். திடீர் நடிகர் ஆன காதலன் ஆண்ட்ருவின் நடிப்பை கண்டு இலியானா சிரித்தபடி இருந்தார்