“காதலிக்க நேரமில்லை 2 ல் நடிக்க ஆசை இருக்கிறது” – சந்திரா

327

காலம் கடந்தும் சில சீரியல்கள் ரசிகர்கள், ரசிகைகளின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதில் நடிக்கும் பிரபலங்களும் உச்சத்தை அடைகிறார்கள். அப்படியான ஒரு சீரியல் தான் காதலிக்க நேரமில்லை.

விஜய் டிவியில் கடந்த 2007 ல் வந்த இந்த சீரியலின் தீம் பாடல் பலரின் செல்போன் ரிங் டோனாக மாறியது. இதில் பிரஜின், சந்திரா ஜோடி நடித்திருந்தார்கள். இருவரையும் இந்த சீரியல் பிரபமலமாக மாறியது.

சந்திரா கோலங்கள் சீரியல் மூலம் தமிழுக்கு வந்தவர். மலையாளம், தமிழ் என பல சீரியல்கள், படங்களில் நடித்துள்ளார். 2016 பாசமலர் சீரியலுக்கு பின் இவர் நடிக்கவில்லை.

தெலுங்கு சானலுக்கு போய்விட்டார். சினிமாவில் தில்லாலங்கடி தான் இவர் நடித்த படம். தற்போது மலையாளத்தில் கதை ஒன்று இவருக்கு உருவாகி வருகிறதாம். காதலிக்க நேரமில்லை 2 ல் நடிக்க ஆசை இருக்கிறது. வாய்ப்புக்கு காத்திருக்கிறேன் என நேர்காணலில் கூறியுள்ளார்.

SHARE