காதலியின் பிரிவு என்னை வாட்டவில்லை: நிரூபித்து விட்டார் ஹாரி

713

காதலியின் பிரிவு என்னை  சோகத்தில் ஆழ்த்தவில்லை என்று இளவரசர் ஹாரி நிரூபித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இளவரசர் ஹாரி, தனது காதலியான க்ரேசிடா போனஸை பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம்ஸ் ஆகிய இருவரும் தங்கள் நண்பரான பெல்லி திருமணத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளனர்.

இந்த திருமண விழாவிற்கு ஹாரி, தனது காதலியுடன் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் மட்டும் தனியாக வந்து திருமண விழாவில் நடனமாடி அசத்தியுள்ளார்.

மேலும் தனது சகோதரருடன் இணைந்து, விருந்தில் பங்கேற்று சந்தோஷமாக இருந்ததன் மூலம், தான் காதல் சோகத்தில் இல்லை என்பதை நிரூபித்துள்ளார்.

லண்டன் கிளப் உரிமையாளர் மற்றும் தங்கள் நெருங்கிய நண்பரான பெல்லி திருமணத்திற்கு வந்துள்ள இளவரசர்கள். தங்கள் சொந்த பணத்தில் வந்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.

SHARE