காதலியை கழற்றிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ

414
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்ட கால காதலி இரினா ஷாயிக்கை பிரிந்தார்.மொடல் மற்றும் நடிகையான இரினா ஷாயிக்கும், ரொனால்டோவும் கடந்த 5 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆகும்.இந்நிலையில் இரினா ஷாயிக் உடன் உள்ள நீண்ட கால உறவு தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில், இரினாவுடனான 5 வருட பயணம் முடிவுக்கு வருகிறது. தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு இருவரும் சிறந்தது என்று நம்புகிறேன். அவர் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் இவர்களின் பிரிவுக்கு பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் லூசியா வில்லலோன் தான் காரணம் என்றும், இவரும் ரொனால்டோவும் பல இடங்களில் சுற்றுத்திரிவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பேலன் டி’ஓர் விழாவில் ரொனால்டோ விருது வென்ற பிறகு இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

SHARE