காதலியை தேடும் கதையாக உருவாகிறது ‘மெய்மறந்தேன்’. இதுபற்றி இயக்குனர் வி.முத்துக்குமார் கூறியது:ஒரு பெண்ணின் குணத்தால் ஈர்க்கப்பட்ட வாலிபன் அவளை காதலிக்க தொடங்குகிறான். அதை தனது பெற்றோரிடம் கூறி காதலுக்கு சம்மதம் வாங்குகிறான். காதலியிடம் அதை சொல்ல வரும்போது அவள் காணாமல் போகிறாள். பல நாட்கள் அவளை தேடும் வாலிபன் ஒரு இடத்தில் அவளை கண்டுபிடிக்கிறான். அவள் இருந்த நிலையை கண்டு அதிர்ச்சி அடைகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. ஜி.ஆர்.அர்வின் ரோஷன் ஹீரோ. சானியாதாரா ஹீரோயின். மீரா கிருஷ்ணன், எலிசபெத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.மணிவண்ணன் தயாரிக்கிறார்