உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்“ என நண்பருடன் தொலைபேசில் கதைத்தவாறு ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒரு உயிரை மாய்த்துள்ளார்.
இச் சம்பவம் நேற்றய முன்தினம் இரவு 7.50 மணியளவில் இடம்பெற்றது.
ரயிலுடன் மோதுண்ட இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சாயைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.
காதல் பிரச்சினை காரணமாக இளைஞன் மனச் சோர்வுக்குள்ளாகியிருந்தார். அவர் நண்பருக்கு அழைப்பெடுத்து ” நான் உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகின்றேன்”என்று கூறியவாறு ரயில் முன்பாய்ந்தார்” என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.