காத்தான்குடி பகுதியில் உள்ள மர அரிவு ஆலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தானது இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், தீ பரவுவதை அவதானித்த அங்கிருந்தவர்கள் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.