காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம் -தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர்.

1470

 

 

“புரட்சியாளர் அம்பேத்கர் புத்த மதம் மாறியது ஏன்?” தொடரின் 15ம் பாகம்

முந்தைய பாகங்களின் சுருக்கம் கட்டுரையின் இறுதியில் உள்ளது.

அம்பேத்கர் பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியவர். இந்து மதத்தில் வேதகாலத்தில் பெண்கள் எவ்வளவு சிறப்புற்றிருந்தனர், பின்னர் எப்படி அடிமைப் படுத்தப்பட்டனர் என்பதையெல்லாம் விரிவாகவே விவரித்திருக்கிறார்.

பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டதற்கு மனுதான் காரணம் என்பதை வலியுறுத்தி அதை ஒழிக்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர். பெண்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். அமபேத்கர் கொண்டுவந்து நிறைவேற்றாமல் போன இந்து சட்டத்தொகுப்பை படித்தோமானால் அம்பேத்கரின் உள்ளம் வெளிப்படும். இதே கண்ணோட்டத்தை அம்பேத்கர் இஸ்லாத்திலும் எதிர்பார்க்கிறார்.

இந்துத்வ சுதந்திரம் இஸ்லாமில் இல்லை

இஸ்லாத்தில் பெண்களுக்கு சுதந்திரம் உண்டா? அம்பேத்கர் எழுதுகிறார் :

‘‘…. அனுகூலமான சட்ட விதிகள் எல்லாம் இருந்தபோதிலும்கூட, முஸ்லீம் பெண்மணி உலகிலேயே நிராதரவற்றவளாக இருந்து வருகிறாள்.

ஓர் எகிப்திய முஸ்லீம் தலைவர் பின்வருமாறு கூறுகிறார்:-

‘‘இஸ்லாம் தனது தாழ்வு முத்திரையை அவள்மீது பதித்துள்ளது; மதத்தின் ஆதரவு பெற்ற பழக்கவழக்கங்கள் காரணமாக அவள் தனது உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் வெளியிடுவதற்கும், தனது ஆளுமையை வளர்த்துக்கொள்வதற்கு மான முழு வாய்ப்பு அவளுக்கு அளிக்கப்படவில்லை.’’

இஸ்லாமிய ஆண் மட்டுமே விவாகரத்து செய்ய முடியும்

தான் குழந்தையாக இருந்தபோது தன்னுடைய பெற்றோர்களல்லாத மற்றவர்களால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட ஒரு திருமணத்தை நிராகரிக்கும் துணிவு எந்த முஸ்லீம் யுவதிக்கும் இல்லை. விவாகரத்து செய்யும் உரிமையைத் தனக்கு அளிக்கக்கூடிய ஒரு ஷரத்தை தனது திருமண ஒப்பந்தத்தில் சேர்ப்பது நலமாக இருக்குமே என்று எந்த முஸ்லீம் மனைவியும் நினைப்பதில்லை.

இத்தகைய சந்தர்ப்பத்தில் அவளது கதிப்போக்கு ‘ஒரு முறை திருமணம் செய்து கொண்டுவிட்டால் என்றென்றைக்கும் திருமணமானவாள்’ என்பதாக அமைந்து விடுகிறது. எத்தகைய கடுமையாக இன்னல் இடுக்கண்கள், தாள முடியாத கொடுமைக்கு உள்ளானாலும் திருமண பந்தத்திலிருந்து அவள் தப்பமுடியாது. அவள் திருமணத்தை நிராகரிக்க இயலாது. ஆனால் அதேசமயம் கணவனோ எத்தகைய காரணமுமின்றி, எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம்.

தல்லாக் தல்லாக் கறிவேப்பிலை

இதற்கு அவன் செய்யவேண்டியதெல்லாம் ‘தல்லாக்’ என்று கூறிவிட்டு, மூன்று வாரங்களுக்கு மனைவியுடன் உடலுறவு கொள்ளாதிருக்க வேண்டும். அவ்வளவுதான். அந்தப் பெண்ணைத் தூக்கியெறிந்து விடலாம். அவனது ஏறுமாறான நடத்தைக்கு குறுக்கே நிற்கும் ஒரே ஒரு விஷயம், சீதனத் தொகை தருவதற்கு அவன் கட்டுப்பட்டிருப்பதுதான்.

இந்தத் தொகை ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்தால், எத்தகைய தடையுமின்றி தன் விருப்பம்போல் விவகாரத்து செய்து விடலாம். கணவன் விவாகரத்து செய்யும் விஷயத்தில் காட்டப்படும் இந்தத் தாராளப்போக்கு ஒரு பெண்ணின் முழுநிறைவான, சுதந்திரமான, மனநிறைவு கொண்ட இன்பகரமான வாழ்க்கைக்குப் பெரிதும் ஆதார  அடிப்படையாக அமைந்துள்ள பாதுகாப்பு உணர்வையே அழித்துச் சிதைத்துவிடுகிறது.

இடதுகைப் பெண்களும், வலதுகைப் பெண்களும்

அது மட்டுமல்ல, பலதார மணம்1 செய்து கொள்வதற்கும், இல்லக்கிழத்தி2 வைத்துக் கொள்வதற்கும் முஸ்லீம் சட்டம் கணவனுக்கு அளித்துள்ள உரிமையால் முஸ்லீம் பெண்ணின் நிலைமை மேலும் மோசமாகிறது; அவளது வாழ்க்கைக்குப் பாதுகாப்பின்மை முன்னிலும் பெரிதும் அதிகரிக்கிறது. ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்வதற்கு, வரித்துக்கொள்வதற்கு முகமதிய சட்டம் அனுமதிக்கிறது.

[1. பலதாரங்களாகத் திருமணம் செய்யப்பட்ட பெண்கள். இவர்களை இடது கைப் பெண்கள் என்று அழைக்கிறது இஸ்லாம்.] [2. அடிமைப் பெண்கள் மற்றும் வேலைக்காரப் பெண்கள். திருமணம் செய்யாமல் இவர்களை “வைத்துக்கொள்ள” இஸ்லாம் வலியுறுத்துகிறது. இவர்களை வலதுகைப் பெண்கள் (Malak-ul-ameen) என்று அழைக்கிறது இஸ்லாம்.]

ஒரு இந்து ஒரு சமயத்தில் எத்தனை மனைவிகளைக் கொண்டிருக்கலாம் என்று இந்துச் சட்டம் எவ்வகையிலும் வரையறுத்துக் கூறவில்லை. இதனுடன் ஒப்பிடும்போது முஸ்லீம் சட்டம் எவ்வளவோ மேல் என்று வாதிடப்படுகிறது. ஆனால் சட்டபூர்வமான நான்கு மனைவிகளுடன் மட்டுமன்றி தன்னுடைய பெண் அடிமைகளுடனும் ஒரு முஸ்லீம் கூடி வாழ்வதையும் முஸ்லீம் சட்டம் அனுமதிக்கிறது என்பதை இங்கு மறந்துவிடக்கூடாது.

வரைமுறை இன்றி அடிமையாக்கப்படும் பெண்கள்

அதிலும் பெண் அடிமைகள் விஷயத்தில் அவர்களது எண்ணிக்கை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். எத்தகைய கட்டுப்பாடுமின்றி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமின்றி முஸ்லீமுடன் கூடிவாழ்வதற்கு அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்.

பலதார மணமுறையாலும், சட்டபூர்வமாக் காமக் கிழத்திகளை வைத்துக்கொள்ளும் முறையாலும் ஏற்படும் எத்தனை எத்தனையோ தீமைகளையும், மிகப்பெரும் பாதகங்களையும் விவரிப்பதற்குச் சொற்களே இல்லையெனலாம். அதுவும் ஒரு முஸ்லீம் பெண்ணுக்கு இதனால் ஏற்படும் இரங்கத்தக்க அவலநிலை சொல்லத் தரமன்று.

பலதார மணமுறையும் காமக்கிழத்திகளை வைத்துக் கொள்ளும் முறையும் அனுமதிக்கப் பட்டிருப்பதால் விதிவிலக்கின்றி எல்லா முஸ்லீம்களுமே இதில் ஈடுபட்டிருக்கின்றனர் என்று பொதுப்படையான முறையில் கூறிவிட முடியாது என்பது உண்மையே. எனினும் ஒரு முஸ்லீம் இந்த உரிமைகளை, சலுகைகளை சுலபமாகப் பயன்படுத்திக் கொண்டு தனது மனைவிக்கு துன்பத்தையும் துயரத்தையும் தொல்லைகளையும் அவலநிலையயும் ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

காமவெறி பரப்பும் மதவெறி மார்க்கம்

திரு. ஜான் பூல் என்பவர் இஸ்லாமின் விரோதியல்ல. அவர் கூறுகிறார்: ‘‘விவாகரத்து விஷயத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த வரம்பற்ற, கட்டுப்பாடற்ற போக்கை சில முகமதியர்கள் தங்கள் சுயநலத்துக்கு மிகப் பெருமளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த விஷயம் குறித்து ‘இஸ்லாமும் அதன் நிறுவனரும்’ எனும் தமது நூலில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்டோபர்ட் பின்வருமாறு கூறுகிறார்.

‘தொடாச்சியாக தங்கள் மனைவிமார்களை மாற்றுவதை சில முகமதியர்கள் ஒரு பழக்கமாகவே கொண்டுள்ளனர். இருபது, முப்பது மனைவிகளை ஏற்கெனவே வரித்துக் கொண்டிருப்பதுடன் திருப்தி கொள்ளாமல், மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஒரு புதிய மனைவியை அடைகின்ற இளைஞர்களைப் பற்றி நாம் படிக்கிறோம்.

பண்டம்போல் பரிமாறிக்கொள்ளப்படும் பர்தா பெண்கள்

இவ்வாறு பெண்கள் வரைமுறையின்றி ஒருவனிடமிருந்து இன்னொருவனுக்கு மாறிக்கொண்டிருப்பதால் ஒரு கணவனும் வீடும் எங்கு கிடைத்தாலும் அவனை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள்; அல்லது, விவாகரத்து செய்யப்பட்டுவிட்ட நிலைமையில் ஜீவனத்துக்கு வேறுவழியின்றி கீழ்த்தரமான வழிகளில் ஈடுபடும்படியான நிலைக்கு உள்ளாகிறார்கள்.

ஒரு முஸ்லீம் ஒரு சமயத்தில் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்துகொள்ள முகமதிய சட்டம் அனுமதிப்பதோடு, தான் விரும்பும் போதெல்லாம் விவாகரத்து செய்யலாம் என்றும் இருப்பதால் நடைமுறையில் அவன் தன் ஆயுட்காலத்திற்குள் எத்தனை மனைவிகளை வேண்டுமானாலும் அடைந்து இன்புற்றிருக்க முடியும்.

ஒரு முகமதியன் முஸ்லீம் சட்டத்தை மீறாமல் நான்குக்கும் அதிகமான மனைவிகளை அடைவதற்கு வேறொரு வழியும் இருக்கிறது. அது தான் இல்லக்கிழத்திகளுடன் கூடி வாழ்வதாகும். குரான் இதனை அனுமதிக்கிறது.

போகக் கழிப்பறையாகிப் போன இஸ்லாமியப் பெண்டிர்

நான்கு மனைவிகளை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கும் சூராவில் ‘இத்துடன் நீ அடிமைப் பெண்களுடனும் கூடி வாழலாம்’ என்னும் சொற்கள் இடம் பெற்றிருக்கின்றன. அடிமைகளுடன் சுகித்து வாழ்வது பாபமல்ல என்று 70 ஆவது சூராவில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. பண்டை நாட்களைப் போலவே இன்றும் எண்ணற்ற முகமதிய குடும்பங்களில் அடிமைகள் காணப்படுகிறார்கள்.

‘முகமதின் வாழ்க்கை’ என்ற தமது நூலில் முய்ர் பின்வருமாறு கூறுகிறார்: ‘இவ்விதம் தங்களுடைய அடிமைகளுடன் கூடி வாழ்வதற்கு தங்கு தடையின்றி அனுமதி வழங்கப்படும் வரை முகமதிய நாடுகளில் அடிமைத்தனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தகைய மனப்பூர்வமான முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்க முடியாது.

இவ்வாறு இந்த அடிமைத்தனம் விஷயத்தில் குரான் மனித குலத்தின் எதிரியாக இருந்து வருகிறது. இதனால் வழக்கம்போல் பெண்கள்தான் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.’’ என்று அம்பேத்கர் கூறுகிறார்.

அதுமட்டுமல்ல, அவர் பர்தா முறையால் இஸ்லாத்தில் பெண்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்கிறார். அதையும் பார்ப்போம்.

பர்தாவுக்குள் அடைக்கப்பட்ட பரிதாபப் பெண்கள்

அம்பேத்கர் கூறுகிறார் : ‘‘இந்து சமுதாயத்தைப் பீடித்துள்ள அதே சமூகத்தீமைகள், கேடுகள் இந்தியாவிலுள்ள முஸ்லீம் சமுதாயத்தையும் பெரிதும் தொற்றிக் கொண்டுள்ளன என்பதில் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை.

இன்னும் சொல்லப்போனால்,  முஸ்லீம்கள் இந்துக்களுக்குள்ள அனைத்துத் தீமைகளையும் வரித்துக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அதற்கும் அதிகமான ஒன்றையும் பெற்றிருக்கின்றனர். அந்த அதிகமான ஒன்றுதான் முஸ்லீம் பெண்களிடையே நிலவும் பர்தா முறையாகும்.

இந்தப் பர்தா முறையின் காரணமாக முஸ்லீம் பெண்கள் தனிமைப் படுத்தப்பட்டிருக்கின்றனர். இப்பெண்மணிகள் முன்புற அறைகளுக்கோ, வெளி தாழ்வாரங்களுக்கோ, தோட்டங்களுக்கோ வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

புழக்கடைகளே பெரும்பாலும் அவர்களுடைய இருப்பிடங்களாக அமைந்துள்ளன.

இளம் வயதினரும் சரி, வயதானவர்களும் சரி ஒரே அறையில் அடைந்து கிடக்கின்றனர்.

எந்த ஓர் ஆண் வேலையாளும் அவர்கள் முன்னிலையில் பணியாற்ற இயலாது.

தன்னுடைய புதல்வர்கள், சகோதரர்கள், தந்தை, மாமன்மார்கள், கணவன் மற்றும் நம்பிக்கைக்குரிய மிகவும் நெருங்கிய உறவினர்கள் போன்றோரைப் பார்ப்பதற்கு மட்டுமே ஒரு முஸ்லீம் பெண்மணி அனுமதிக்கப்படுகிறாள்.

பிரார்த்தனைக்காக அவள் மசூதிக்குக் கூட செல்ல முடியாது.

அவள் எங்கே வெளியில் சென்றாலும் எப்போதும் புர்கா (முத்திரை) அணிந்தே செல்ல வேண்டும்.

இந்த புர்கா பெண்கள் தெருக்களில் நடந்து செல்லும் காட்சி இந்தியாவில் ஒருவர் காணக்கூடிய மிகவும் அருவருப்பான காட்சிகளில் ஒன்றாகும்.

நோய்கள் பரப்பும் நொய்மை மார்க்கம்

இத்தகைய ஒதுக்கல்முறை முஸ்லீம் பெண்களின் உடலாரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. ரத்தசோகை, காச நோய், பயோரியா போன்ற நோய்கள் அவர்களைச் சர்வசாதாரணமாகப் பீடிக்கின்றன.

அவர்களுடைய உடலமைப்பு உருக்குலைகிறது; முதுகு வளைந்துவிடுகிறது; எலும்புகள் துருத்திக் கொள்கின்றன; கைகால்கள் உருக்கோணலாகி விடுகின்றன. விலா எலும்புகளும், மூட்டெலும்புகளும் இன்னும் சொல்லப்போனால் அவர்களது எலும்புகள் அனைத்தும் வலியெடுக்கின்றன. அவர்களிடம் அடிக்கடி மிகுதியான நெஞ்சுத் துடிப்பு காணப்படுகிறது.

இந்த இடுப்பெலும்பு உருத்திரிபு பிரசவத்தின்போது அகால மரணத்தில் கொண்டுபோய் விடுகிறது.

பர்தா முறை முஸ்லீம் பெண்களின் மனவளர்ச்சிக்கும் தார்மீக வளர்ச்சிக்கும் ஒரு தடையாக உள்ளது.

மனோவியாதிகளுக்குள் மாட்டிக்கொள்ளும் மார்க்கத்துப் பெண்டிர்

ஆரோக்கியமான சமூகவாழ்க்கை பறிக்கப்படுவதால் அது தார்மீக சிதைவுக்கு, சீர்கேட்டுக்கு இட்டுச் செல்கிறது. வெளி உலகிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக அவர்கள் தங்கள் மனத்தை சிறு சிறு குடும்பச் சண்டைகளில் செலுத்துகிறார்கள்.

இதன் காரணமாக அவர்களது கண்ணோட்டம், மனப்பாங்கு மிகக் குறுகியதாக, கட்டுப்படுத்தப்பட்டதாகி விடுகிறது. முஸ்லீம் பெண்கள் ஏனைய சமூகங்களைச் சேர்ந்த தம்முடைய சகோதரிகளுக்குப் பலதுறைகளிலும் பின்தங்கி இருக்கின்றனர். எத்தகைய வெளிநிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.

அடிமைப் புத்தியும் தாழ்வுமனப்பான்மையும், பெரும் பாறாங்கல்லாக அவர்களை அழுத்தி அமிழ்த்துகின்றன.

அறிவாற்றல் பெறுவதில், மேலும் மேலும் கல்வி கற்பதில் அவர்களுக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. ஏனென்றால் வீட்டின் நான்கு சுவர்களுக்கு அப்பால் உள்ள எதிலும் அக்கறை காட்டாதிருக்கும்படி அவர்கள் போதிக்கப்படுகின்றனர்.

பர்தா பெண்கள் குறிப்பாக நிராதரவற்றவர்களாக, அபலைகளாக, மருட்சியும் பீதியும் அடைபவர்களாக, வாழ்ககையில் எந்தப் போராட்டத்திலும் துணிந்து ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்களாக, தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

பர்தா ஒரு கடும் பிரச்சினை

இந்தியாவிலுள்ள முஸ்லீம்களிடையே பர்தாப் பெண்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது பர்தா பிரச்சினையின் பரந்த பரிமாணததையும் கடுமையையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

பர்தா முறை தார்மீக ரீதியில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளுடன் ஒப்பிடும்போது உடல்ரீதியிலும், அறிவுத்துறை ரீதியிலும் அது தோற்றுவித்துள்ள விளைவுகள் அத்தனை கடுமையானவை அல்ல என்றே கூறவேண்டும்.

பர்தா முறை இருபாலரின் பால் ஈடுபாடு குறித்து, நாட்டம் குறித்து, வேட்கை குறித்து ஏற்பட்ட ஆழமான ஐயப்பாடே இந்த பர்தா முறை தோன்றியதற்கு அடிப்படைக் காரணம் எனலாம்.

இரு இனங்களையும் பிரித்து இதனைக் கட்டுப்படுத்துவது இதன் நோக்கம். ஆனால் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்குப் பதிலாக பர்தாமுறை முஸ்லீம் ஆண்களின் பழக்க நடை முறைகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பர்தா முறை காரணமாக ஒரு முஸ்லீமுக்கு தனது வீட்டுப் பெண்களைத் தவிர வெளியே உள்ள வேறு எந்த முஸ்லீம் பெண்களுடனும் தொடர்பில்லாமல் போய்விடுகிறது. தனது வீட்டுப் பெண்களுடன் அவனுக்குள்ள தொடர்பும்கூட எப்போதேனும் நடைபெறும் உரையாடலுடன் நின்றுவிடுகிறது.

மனப்பிறழ்வுப் பாலுணர்ச்சிகளை உருவாக்கும் இஸ்லாம்

ஒரு முஸ்லீம் ஆண் குழந்தைகளாகவும் வயதானவர்களாகவும் இருப்போரைத் தவிர வேறு எந்தப் பெண்பாலருடனும் தோழமை பூணவோ, ஒன்று கலந்து பழகவோ முடியாது.

இவ்வாறு ஆண்களை பெண்களிடமிருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு ஆண்களின் பழக்க வழக்கங்கள் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

ஆண், பெண் இருபாலரிடையேயும் உள்ள எல்லா தொடர்பையும் துண்டிக்கும் ஒரு சமூக அமைப்பு அதீத பாலுணர்ச்சி மீதும், இயற்கைக்கு மாறான இதர தீய பழக்கவழக்கஙகள் மீதும் நாட்டம்கொள்ளும் ஓர் ஆரோக்கியமற்ற போக்கையே தோற்றுவிக்கும் என்று கூறுவதற்கு ஒருவர் மனோதத்துவ நிபுணராக இருக்க வேண்டும் என்பதில்லை.

இந்துக்களை ஏன் இஸ்லாமியர் மதிப்பதில்லை ?

பர்தா முறையின் தீய விளைவுகள் முஸ்லீம் சமூகத்துடன் நின்றுவிடவில்லை. இந்துக்களை முஸ்லீம்களிடமிருந்து சமூகரீதியில் ஒதுக்கிவைப்பதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த ஒதுக்கல் இந்தியாவின் பொது வாழ்க்கையில் ஒரு சாபக்கேடாக இருந்துவருவது அனைவருக்கும் தெரியும். இந்த வாதம் வலிந்து பெறப்பட்டதாகத் தோன்றக்கூடும், முஸ்லீம்களிடையே நிலவும் பர்தா முறையைக் காட்டிலும் இந்துக்களின் இணங்கிப் பழகாத போக்கே இந்தத் தனிமைப்படுத்தலுக்கு காரணம் என்று கூறக்கூடும். ஆனால் இந்துக்கள் இதை மறுக்கிறார்கள்.

இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்குமிடையே தொடர்பு ஏற்படுத்திக்கொள்வது சாத்தியமில்லை. ஏனென்றால் இத்தகைய தொடர்பு ஒருபுறம் பெண்களுக்கும் இன்னொரு புறம் ஆண்களுக்கும் இடையேயான தொடர்பையே குறிக்கும் என்பதால் இது சாத்தியமில்லை என்று அவர் கூறுவது நியாயமாகவே தோன்றுகிறது.

பர்தா முறையும் அதன் விளைவாக ஏற்படும் தீமைகளும் முஸ்லீம்களிடையே மட்டுமின்றி, நாட்டின் சில பகுதிகளில் இந்துக்களில் குறிப்பிட்ட சில பகுதியினரிடையேயு்ம் காணப்படுகின்றன. ஆனால் இதில் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

இந்துக்களின் இழிவு மதத்தால் ஏற்பட்டது அல்ல

அதாவது முஸ்லீம்களிடையே காணப்படும் பர்தா முறை மதத்தின் ஆணையை ஆதாரமாக, அடிப்படையாகக் கொண்டது. இந்துக்களிடையே நிலவும் பர்தா முறை அப்படிப்பட்டதல்ல.

இந்துக்களைவிட முஸ்லீம்களிடையே தான் பர்தா மிக ஆழமாக வேரோடிப் போயிருக்கிறது.

மதத்தின் ஆணைகளுக்கும் சமூகத்தின் தேவைகளுக்கும் இடையேயான தவிர்க்க முடியாத முரண்பாட்டை எதிர்கொண்டு வெற்றி பெறுவதன் மூலம் தான் இந்தத் தீமைக்கு முடிவுகட்டமுடியும்.

பர்தா பிரச்சினை – அதன் மரபு மூலம் ஒருபுறமிருக்க – முஸ்லீம்களுக்கு அது  உண்மையிலேயே ஒரு சிக்கலான பிரச்சினை.

ஆனால் இந்துக்களுக்கு அப்படியல்ல. இந்தத் தீமையைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முஸ்லீம்கள் ஏதேனும் முயற்சி எடுத்துக் கொள்கிறார்களா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை.’’

இவ்வாறு அம்பேத்கர் இஸ்லாத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் நிலையை விளக்குகிறார்.

 முந்தைய பாகங்களின் சுருக்கம்: இந்துமதத்தை சீர்திருத்த அம்பேத்கர் முயன்றார் என்பதையும், அதில் வெற்றிபெற முடியாது என்று சொல்லி மதமாற்றத்தைத் தீர்வாகச் சொன்னதையும் பாகம் 2 மற்றும் 3ல் பார்த்தோம். அந்த அறிவிப்பு மற்றும் அறிவிப்பு நடந்த மாநாடு பற்றி பாகம் 1 அறிமுகம் செய்தது. ஆனால், மதமாற்றம் தீர்வல்ல என்று அந்த அறிவிப்பை மற்ற தலித் தலைவர்கள் நிராகரித்தனர் (பாகம் 4ல்). பாகம் 5ல் உலகியல் அடிப்படையிலான பயன்களுக்காக மதமாற்றத்தின் அவசியம் பற்றியும் பாகம் 6ல் அதன் ஆன்மிகப் பயன் பற்றியும் பார்த்தோம். இனி, தீண்டத்தகாதவர்களுக்குளான உள்ஜாதீயப் பாகுபாடுகள், அதன் அரசியல் காரணங்கள், அதன் தீர்வான மதமாற்றத்தின் அவசியத்தை பாகம் 7ல் பார்த்தோம். 8ம் பாகத்தில் இந்துமதத்துக்குள் இருந்தே அதைச் சீர்திருத்த முடியாது என்பதற்கான அம்பேத்கரின் வாதங்களைப் பார்த்தோம். தகுதி வாய்ந்த தலித் ஒருவருக்கு ஒரு வருட கால அளவில் சங்கராச்சாரியாருக்கு இணையான மரியாதைகள் தரும் வேண்டுகோளை அவர் முன்வைத்ததை பாகம் 9ல் பார்த்தோம்.  தங்கள் மதத்திற்கு மாற்ற “முஸ்லீமாக மதம் மாறுங்கள்” என்று நேரடியாகக் கோரிக்கைகள் விடுத்ததையும், மறைமுக அழுத்தங்கள் கொடுத்ததையும் பாகம் 10ல் பார்த்தோம்.  வாழும் சக்திகளைத் திரட்டிக்கொள்ள தலித்துகளுக்கு மிகச் சாதகமான ஒரு இந்து வெளியாக சீக்கிய மதத்தை அம்பேத்கர் கருதியது பற்றி பாகம் 11ல் பார்த்தோம். கிறுத்துவம் எனும் நிறுவன அமைப்பை வரலாற்றுப் பார்வையில் அம்பேத்கர் ஒதுக்கியது குறித்து பாகம் 12ல் பார்த்தோம். மதமாற்றம் என்பதை ஆக்கிரமிக்க வந்த ஐரோப்பியர்களின் ஒரு சிறப்பான உத்தியாக இருந்ததை பாகம் 13ல் பார்த்தோம். இஸ்லாம் என்பது அடிமைகளை உருவாக்கும் மார்க்கம் என்பதை பாகம் 14 விளக்குகிறது.

முந்தைய பாகங்களைப் படிக்க: பாகம் 1 || பாகம் 2 || பாகம் 3 || பாகம் 4 || பாகம் 5 || பாகம் 6 || பாகம் 7 || பாகம் 8 || பாகம் 9 || பாகம் 10 || பாகம் 11 || பாகம் 12 || பாகம் 13 || பாகம் 14 || பாகம் 15 ||

(தொடரும்….)

குறிச்சொற்கள்: 

5 மறுமொழிகள் [பாகம் 15] இஸ்லாமில் பெண் உரிமைகள் குறித்து அம்பேத்கர்

  1. kaafir on August 31, 2011 at 4:05 pm

    நல்ல தொடர்.. இந்திய வில் இது போன்ற விஷயங்கள் கம்மியாக நடப்பதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்து வரும் ஹிந்து சமுதாய சுழல் தான். அதனால் தான் இஸ்லாமிய பெண்கள் கூட இந்தியாவில் பல தர manangalukku சம்மதம் தெரிவிப்பதில்லை..

    சவுதி போன்ற 100 % இஸ்லாமிய நாடுகளில் பல தார மனங்கள் சர்வ சாதாரணம் என்பது என் நண்பர்கள் கூறி கேட்டிருக்கிறேன். ..

    ஆனாலும் இஸ்லாத்தில் இவ்வளவு கொடுரம் இருந்தும் நாம் நமது பெண்களுக்கு என்ன சொல்லி கொடுக்கிறோம்? எல்லா மதமும் ஒன்று என்னும் உதவாத கருத்தை தான். அதனால் தான் இந்த கொடுமை எல்லாம் தெரியாமல் பலரும் இஸ்லாமிய ரோமியோ க்களுக்கு பலியாகி மதம் மாறுகிறார்கள் .. லவ் ஜிஹாத் போன்ற கொடூரங்களுக்கு இது தான் காரணம்..

    முதலில் நாம் நமது பெண்களுக்கு இந்த உண்மைகளை புரிய வைக்க வேண்டும்..

    அனால் இது போன்ற விஷயங்களை இன்டர்நெட் இல் எழுதி பெரிய பயன் வருமா என்பது சந்தேகம் . . இஸ்லாமிய கட்சி களுக்கு எக்கச்சக்க பத்திரிகைகள் இருக்கு . .அவை பொது நூலகங்களில் கூட கிடைக்கிறது.. அனால் நமக்கு ஒரே ஒரு mainstream பத்திரிகை கூட இல்லை.. ? .. ஆசிரியர் குழு இது குறித்து சிந்திக்க வேண்டும் என்று தாழ்மை உடன் கேட்டு கொள்கிறேன்.

    பசுத்தாய் என்று ஒரு இந்து முன்னணி பத்திரிகை இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன் ..அனால் இது வரை எந்த நூலகத்திலும் அல்லது கடையிலும் பார்த்ததில்லை .

SHARE