கார் தொலைந்து விட்டதா? மொபைல் மூலம் கண்டறியலாம்

250

நாம் வெளியில் செல்ல தயாரானபின் தான் கார் சாவி முதல் வீட்டு சாவி வரை எல்லாவற்றையும் எங்காவது மறந்து வைத்துவிட்டு அதை காணோம் என தேடி கொண்டிருப்போம்.

சில சமயங்களில் பெரிய பெரிய மால்கள், சந்தைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு சென்றிருக்கும் போது கார் அல்லது பைக்கை எங்காவது நிறுத்திவிட்டு பின் அதனை தேடி கொண்டு இருப்போம்.

இதற்கான தீர்வாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் தான் TrackR.

பயன்படுத்தும் முறை

TrackR மிக சிறிய அளவில் இருக்கும். இதனை கார், பைக், சாவி அனைத்திலும் பொருத்தி கொள்ளலாம்.

நமது ஸ்மார்ட் போனில் TrackR ஆப்-ஐ தரவிறக்கம்(Download) செய்து பதிந்து(Install) கொள்ள வேண்டும்.

வெளியில் செல்லும் போது காரில் இதனை பொருத்தி விட வேண்டும். கார் நிற்கும் இடத்தினை அறிவதற்கு அந்த ஆப்-ஐ ஓப்பன்(Open) செய்து பார்க்கும் போது Lost item என்பதனை க்ளிக் செய்ய வேண்டும்.

கடைசியாக TrackR இருந்த இடத்தினை அந்த ஆப்-ல் நமக்கு காட்டும். இதன் மூலமாக கார் உள்ள இடத்தினை அறிய முடியும். இதனை அனைத்து பொருள்களிலும் நாம் பயன்படுத்த இயலும்.

SHARE