கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு; காணொளியால் அதிர்ச்சி!

60

 

அமெரிக்கா பாடசாலை ஒன்றில் போட்டி என்ற பெயரில், மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள் சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி வருகிறது.

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில், டீர் கிரீக் என்ற பள்ளி ஒன்று, ஒரு வார கால நிதி திரட்டும் சமூக சேவைக்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது. இதில், மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு
பல்வேறு வழிகளில் நிதி சேகரிக்கும் பணியானது நடந்துள்ள நிலையில் கால்களை நக்கும் இக்காணொளி வெளியாகியுள்ள நிலையில், வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளதுடன் பலர் கண்டனங்களையும் வெளியிட்டு உள்ளனர்.

இந்த நிதி திரட்டும் நிகழ்ச்சி வழியே, ரூ.1 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரம் அளவுக்கு பணம் திரட்டப்பட்டதற்காக மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 29-ந்தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. அந்த பள்ளியில் ஒரு வார காலத்திற்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடந்துள்ளது. அருகேயுள்ள காபி கடை ஒன்றில் வேலைக்கு மாற்று திறனாளிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு வழங்குவதற்காக இந்த நிதி சேகரிக்கும் பணி இடம்பெற்றுள்ளது. மாணவர்கள் நிதி சேகரித்த நோக்கம் நல்லதாக இருப்பினும் , கால்களை நக்கி நிதிசேகரிப்பில் ஈடுபட்டமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

SHARE