டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் 2018 ஆம் ஆண்டிற்கான கால்பந்து போட்டியில் இலங்கை இராணுவ கால்பந்து அணியானது பங்கு பற்றி சம்பியனாக தேர்ந்தெடுத்ததை முன்னிட்டு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக கால்பந்து அணியினரை சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாடாளவியல் ரீதியாக உள்ள 17 பிரசித்தி பெற்ற கால்பந்து கழகங்கள் இந்த போட்டியில் பங்கு பற்றிக் கொண்டனர்.
இறுதிச் சுற்றுப் போட்டிகள் இராணுவ அணியினர் மற்றும் புளு ஸ்டார் கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது. இந்த போட்டியில் இராணுவ அணியினர் 3 -1 ரீதியில் சிறப்பாக விளையாடி ஹோல்களை பெற்று வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர்.
இலங்கை இராணுவ கால்பந்து அணியினர்’ மற்றும் கால்பந்து பயிற்சிவிப்பாளர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்து இவர்களது திறமைகளை கௌரவித்து வாழ்த்துக்களை இராணுவ தளபதி தெரிவித்தார்.
இராணுவ அணியினர் 16 போட்டிகளில் பங்கு பற்றி 10 போட்டிகளில் வெற்றி பெற்றதுடன் 6 போட்டிகளில் சமநிலையை அடைந்துள்ளனர்.
இராணுவ தளபதியின் சந்திப்பின் போது இராணுவ பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் நிஷ்சங்க ரணவன, இராணுவ விளையாட்டு பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அநுர சுத்தசிங்க, இராணுவ கால்பந்து விளையாட்டு சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஏ. ஏ கொடிப்பிலி அவர்கள் இணைந்து கொண்டனர்.