காளான் – 1/2 கிலோ
உருளைக்கிழங்கு – 3 சிறியது
வெங்காயம் – 2
பச்சைப் பட்டாணி – ¼ கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்லு
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்துமல்லி – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
பிரெட் தூள் – 1 1/2 கப்
முட்டை – 2
சமையல் எண்ணெய் – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
காளானை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துகொள்ளவும்.
பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து சிறிது நேரம் வரை நன்றாகக் கலக்கவும்.
நறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்க்கவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.
செய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கவும்.
பின் நறுக்கிய கொத்தமல்லி இலையைச் சேர்க்கவும்.
முட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும்.
பிரெட் தூள் தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
மசாலாவை சிறிய பந்துகள் போல் பிடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பிரெட் தூளில் பிரட்டி பின் தடாவில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அதில் போட்டு இருபுறமும் சிவக்கும்வரை பொறுத்திருந்து எடுக்கவும்.
சுவையான காளான் கட்லெட் தயார்.