கியூபாவிலிருந்து கனடாவிற்கு மாற்றி அனுப்பிய சடலத்தினால் ஏற்பட்ட சர்ச்சை

103

 

கியூபாவில் உயிரிழந்த கனடியர் ஒருவரின் சடலம் மாற்றி அனுப்பி வைக்கப்பட்டதனால் குடும்பத்தினர் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.

விடுமுறையைக் கழிப்பதற்காக மொன்றியாலைச் சேர்ந்த ஒருவர் கியூபா சென்றிருந்த போது அங்கு உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபரின் சடலத்திற்கு பதிலாக வேறும் ஒருவரின் சடலத்தை கியூப அதிகாரிகள், கனடாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தனது தந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்வதற்கு கனடிய அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இறுதிக் கிரியை
பாராஜ் அல்லாஹ் ஜார்ஜோர் என்ற நபரே இவ்வாறு கியூபாவில் உயிரிழந்திருந்தார். தந்தையின் இறுதிக் கிரியைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் வேறு ஒருவரின் சடலமே கிடைக்கப் பெற்றது என குறித்த நபரின் மகளான மிரியம் ஜார்ஜோர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி மாரடைப்பு காரணமாக தமது தந்தை கியூபாவில் உயிரிழந்தார் என தெரிவித்துள்ளார். சடலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக 10000 டொலர்களை செலுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE