கியூபெக்கில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட 18 பேர் கைது

86

 

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடிய பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடமிருந்து போதைப் பொருள், ஆயுதங்கள் மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.

 

SHARE