கிர்கிஸ்தான் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

475

கிர்கிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபராக பதவி வகித்தவர். குர்மான்பெக் பாகியேவ். இவரது ஆட்சியின் போது எதிர்கட்சியினர் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தை அடக்க ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். அதில் 77 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இவர் மீது மனித உரிமை மீறல் குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அவர் கிரிகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பி ஒடி தலை மறைவானார்.

இவர் மீதான வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. அந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது முன்னாள் அதிபர் குர்மான்பெக் பாகியேவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

SHARE