கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு

357

 

கிளிநொச்சியில் குற்றங்களோடு தொடர்புபட்டவர்களை கைது செய்வதிலும் முறைப்பாடுகளுக்கு நடவடிக்கை எடுப்பதிலும் காவல்துறையினர் அசமந்தப்போக்கு மற்றும் பக்கச்சார்பை கடைப்பிடிப்பதாக தெரியவருகின்றது.

கடந்த 25ம் திகதி கிளிநொச்சி கண்ணகை நகரில் கோவில் ஒன்றின் திருவிழாவிற்கு சென்று திரும்பிக்கொண்டிருந்த மாணவி ஒருவரை நள்ளிரவு 1 மணியளவில் வழிமறித்து அவருடையை வாயை பொத்தி தகாத முறையில் நடக்க சிலர் முற்பட்டனர்.

DSC00584

இது தொடர்பாக, குறித்த மாணவி தருமபுரம் மற்றும் கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடுகள் செய்தபோது குற்றத்தோடு தொடர்புடைய ஒருவர் மாத்திரம் கைது செய்யப்பட்டு, அவரும் பொலிசாரின் அனுசரணையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் புன்னைநீராவியை சேர்ந்த குருசாமி கபிலன் இவர் கள்ள மணல் வியாபாரி மற்றும் ஐயம்பிள்ளை சீலன், மத்தியூஸ் சஞ்சீத்தரன் இவர் கள்ள மர வியாபாரி என தெரியவருகின்றது.

இவர்கள் மூவர் தொடர்பாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும், கைது செய்யபட வேண்டிய ஐயம்பிள்ளை சீலன், குருசாமி கபிலன் என்பவர்கள் வெளியில் நடமாடி வருகின்றனர்.

கிளிநொச்சியில் பொலிசார் குற்றச்செயல்கள் சமூகவிரோதக் கும்பல்களோடு நல்லுறவு வைத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பொலிசார் மீதும் நீதித்துறையின் மீதும் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தி வருகின்றது.

SHARE