தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பிரதான தேர்தல் பிரசார கூட்டம் வட்டக்கச்சியில் இடம்பெற்றது. வட்டக்கச்சி பொதுச்சந்தை வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழரசுக்கட்சி தலைவரும் வேட்பாளருமான மாவை.சேனாதிராசா முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், வேட்பாளரும் சாவகச்சேரி டிறிபேக்கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா உட்பட கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உரையாற்றினர்.