கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு புதிய நீதிமதி நியமனம்

107

 

கிளிநொச்சி மேல் நீதிமன்ற புதிய நீதிபதியாக A.G அலெக்ஸ்ராஜா பிரதம நீதியரசரால் நியமிக்கப்பட்டுள்ளார்

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மேல் நீதிமன்ற நீதிபதி A. M. M சஹாப்தீன் எதிர்வரும் 24ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் பெற்று செல்லவுள்ளார்.

இதனடிப்படையிலேயே குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சிவில் நிர்வாக கட்டமைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றத்தின் பின்னர் சிவில் நிர்வாக கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

அதன் ஒரு அங்கமாக கிளிநொச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றம் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து மேல் நீதி மன்றம் உருவாக்கப்பட்டு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தின் முதலாவது மேல் நீதிமன்ற நீதிபதியாக மேல் நீதிமன்ற நீதிபதி A. M. M சஹாப்தீன் நியமிக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2022 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரைகடமையாற்றிய காலப்பகுதியில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 75 வீதமான வழக்குகளை முடிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE