கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும். இல்லையேல் தமிழர்களின் கோவணத்தை சிங்களவர்களும், முஸ்லீம்களும் உருவிவிடுவார்கள்

386

இலங்கையில் மிகக்கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது கிழக்க மாகாணம். குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் இதில் உள்ளடக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகத்தை சர்வதேச நாடுகள் குறிவைத்துள்ளன. காரணம் என்னவென்றால் உலகப்போர் இடம்பெறுகின்றபொழுது ஆசியப் பிராந்திய நாடுகளைத் தாக்குவதற்கு இலங்கையினுடைய திருகோணமலை துறைமுகத் தளம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ், முஸ்லீம், சிங்களம் என தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டுவிட்டது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மையாக தமிழ் மக்களே வாழ்ந்து வந்தனர். சிங்களவர்களும் முஸ்லீம்களும் தமிழ் மக்களுடைய காணிகள் சுரண்டப்பட்டு அத்துமீறிய குடியேற்றங்கள் செய்யப்பட்டு இப்பிரதேசமானது இன்று சீரழிந்து போயுள்ளது. கலை, கலாச்சாரம் என்பது அன்று தொடக்கம் இன்றுவரை கட்டிக்காத்து வந்த கிழக்கு மாகாணம் சமுதாய சீர்கேட்டினால் மதுபோதையில் மிதக்கின்றது. இவ்வாறான நிலைப்பாட்டை சிங்கள அரசாங்கமே கொண்டு வந்துள்ளது.

Eastern Sri Lanka - Early settlement

1990ம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு மாகாணம் இருந்த நிலைப்பாடு வேறு. 1995 – 2008 வரை இருந்த நிலைப்பாடு வேறு. 2016ம் ஆண்டு முற்றாக மாற்றம் பெற்று இன்று தமிழா, முஸ்லீமா, சிங்களமா என்ற நிலைப்பாடு கிழக்கு மாகாணத்தில் வந்துள்ளது. அங்கு இருக்கக்கூடிய அரசியல் தலைவர்களுடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது விடுதலைப் புலிகளுடனான யுத்த முடிவுக்குப் பின்னர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. அதனைவிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் தமிழ் மக்களுக்குரிய காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிக் குடியேறியுள்ளனர். இது தொடர்பாக பாராளுமன்றத்திலும், தனிப்பட்ட ரீதியிலும் அமைச்சர்களுடன் தொடர்புகொண்டபோதிலும் அதனை அவர்கள் கண்டு கொள்ளாது இருப்பது தமிழ் மக்களுடைய இருப்பை சூறையாடியுள்ளமையை எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் வாகரை, புனானை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், செங்கலடி, மயிலம்பாவெளி, மரப்பாலம், வெள்ளாவெளி, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், பாலமீன்மடு, காத்தான்குடி, மஞ்சஞ்தொடுவாய், ஆரையம்பதி, தாலங்குடா, கல்லாறு, பெரிய கல்லாறு, துறைநீலாவனை, மருதமுனை, கல்முனை, காரைதீவு, அக்கரைப்பற்று, தம்பிலிவில், திருக்கோவில், கஞ்சிகுடிச்சாறு, பொத்துவில்; போன்றவையும் திருகோணமலையில் குச்சவெளி, ஓர்சில், சைனாபே, மூதூர், திருகோணமலை நகர்ப் புறங்களை அண்டிய பகுதி, மாவிலாறு போன்ற பகுதிகளிலும் முஸ்லீம்களும் சிங்களவர்களும் தமிழ் பிரதேசங்களில் அத்துமீறி தமது குடியேற்றங்களை நிறுவியுள்ளனர். அங்கிருக்கக்கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களுமாக தளம்பலான அரசியல் நிலைப்பாட்டினையே கொண்டுள்ளனர். தற்பொழுது இருக்கக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகளில் அனுபவமில்லாதவர்களே அங்கிருக்கின்றார்கள். யோகேஸ்வரன் எம்பியை வாக்குச்சேகரிப்பதற்காகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு பகுதிகளும் சிங்களவர்களாலும், முஸ்லீம்களாலும் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஆக்கபூர்வமான கருத்துக்களை இவர்களால் கூறமுடியாமல் உள்ளது. முஸ்லீம் காங்கிரசை நம்பிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பொழுது கோட்டை விட்டதே இன்று முஸ்லீம்களுக்குச் சாதகமாக அது அமைந்துள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் மூதூர், சம்பூர் கிழக்கு மாகாணத்தின் நகரை அண்மித்த பகுதியான ஓட்டமாவடி, வாழைச்சேனை, ஏறாவூர், காத்தான்குடி, கல்முனை, ஒலுவில், அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற பகுதிகளில் மாத்திரமே முஸ்லீம் இனத்தவர்கள் செறிந்து வாழ்கின்றார்கள். அதிலும் குறிப்பாக காத்தான்குடியிலேயே முஸ்லீம்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் முஸ்லீம் காங்கிரஸ் பலமாக உள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏற்கனவே பிள்ளையான் என்கின்ற சந்திரகாந்தன் அவர்கள் முதலமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் முன்னாள் விடுதலைப்புலிப் போராளி என்பதும் அனைவரும் அறிந்ததே. சட்டரீதியாகப் பார்க்கின்றபொழுது சிறுபான்மைக் காப்பீடுகள் என்று பார்க்கின்றபொழுது 1944ம் ஆண்டு மந்திரிகளால் தயாரிக்கப்பட்ட நகல் திட்டத்தை அடிப்படையாகக்கொண்டு 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த சோல்பரிக் குழுவினர் மந்திரி மார்களினால் தயாரிக்கப்பட்ட நகல் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இலங்கையின் யாப்பு வரைந்தனர். அக்காலகட்டத்தில் யாப்புத் தொடர்பில் இரண்டு அதிருப்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

1.சிறுபான்மை மக்களின் நலன்பேணக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. எனக்கருதி சிறுபான்மை இன மக்கள் மந்திரிமார்களினால் தயாரிக்கப்பட்ட நகல் திட்டத்தினை எரித்தனர்.

2.இலங்கையில் இலட்சக்கணக்காக வாழுகின்ற இந்திய வம்சாவளியான மக்களின் நலன்பேணக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. ஆகவே இந்திய அரசு இந்த நலத்திட்டத்திற்கு எதிராக எதிர்ப்பை வெளியிட்டது. அக்காலகட்டத்தில் சிறுபான்மைக் காப்பீடுகள் என்னும் விடயத்தையும் அரசியல் அமைப்பில் சேர்த்துக் கொண்டன. இதில் ஒன்பது விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.
1. 29 (2) ஆம் உப பிரிவு
2. செனட் சபை
3. நியமன அங்கத்துவம்
4. பல்லங்கத்துவ தேர்தல் தொகுதி
5. கோமரைக் களகம்
6. பொதுசேவை ஆணைக்குழு
7. நீதி சேவை ஆணைக்குழு
8. யாப்புத் திருத்தல் 2/3 பெரும்பான்மை
9. தேர்தல் தொகுதி நிர்ணயம் இதில் முக்கிய விடயமாக,
A. எந்தவொரு இன மத கலாச்சார பிரிவினரும் தன்னுரிமையோ, சுதந்திரத்தையோ கட்டுப்படுத்தக்கூடிய சட்டங்களை உருவாக்கக்கூடாது.
B. குறித்த ஒரு இனமத கலாச்சார பிரிவினருக்கு முன் உரிமையோ, சலுகையோ வழங்கக் கூடாது.
C. குறித்த ஒரு இன மத கலாச்சார பிரிவினருக்கு விதிக்கப்படாத கட்டுப்பாடுகளையும், தடைகளையும் பிரித்தொரு தரப்பினருக்கு இடப்படும் வகையில் சட்டங்களை இயற்றல் ஆகாது. வேண்டுமானால் 3/2 பெரும்பான்மை பெற்று மாற்றியமைக்கலாம். சிறுபான்மை இனங்கள் தொடர்ந்தும் பேணிப்பாதுக்காக்கப்படவேண்டும் என்ற விடயங்களும் கருத்தில் கொள்ளப்படுதல் வேண்டும். அக்காலகட்டத்தில் திட்டமிட்டு சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் கொண்டு வரப்பட்ட சட்டத்தினைக் கையில் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை வடக்கிலும் கிழக்கிலும் அடிமைத்தனமாக வைத்திருக்க சிங்களவர்கள் முயற்சி செய்கின்றார்கள். குறிப்பாக 1948ம் ஆண்டு பிரச்சார உரிமைத் திட்டம், 1949 பாராளுமன்றத் தேர்தல் திருத்தச்சட்டம், 1956ம் ஆண்டு தனிச் சிங்கள அரச கருமங்களின் திட்டம். 1958ம் ஆண்டு சிவில் எழுத்துச் சட்டம், 1967ம் ஆண்டு சிறிமாவோ சாஸ்திர ஒப்பந்தம் அமுலாக்கும் திட்டம் என்பனவும் இக்கால கட்டத்தில் இடம்பெற்றது. தற்பொழுது இவற்றுள் தனிச் சிங்கள அரசகருமங்களின் திட்டம், பிரச்சாரத்திட்டம், சிறீ எழுத்துச் சட்டம் இவையெல்லாம் செல்லுபடியற்றதாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் சிங்களவர்கள் சிறுபான்மை இனத்திற்கு எதிராக தமது சட்டங்களைத் திணிக்க முனைகின்றனர். முப்பது ஆண்டுகள் வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப்புலிகளினுடைய ஆட்சி நிறுவப்பட்டமையினால் சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளுக்கு இவைகள் சிம்ம சொப்பனமாக விளங்கின. இதன் காரணமாக தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கவேண்டிய நிலைப்பாட்டிலேயே இருந்து வந்தனர். இன்று வடக்கையும், கிழக்கையும் பார்க்கின்றபொழுது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தொடர்ந்தும் சிங்கள அரசாங்கம் தமது அராஜக நடவடிக்கைகளை கட்டவிழ்;த்துவிட்டுள்ளது. அதில் ஒரு பிரதிபலிப்பாகவே இன்று கிழக்கு மாகாணம், கலை கலாச்சாரங்கள் மாற்றப்பட்டு தனி முஸ்லீம் கிராமங்கள், தனி சிங்களக் கிராமங்கள் வந்துவிடும் நிலைமையில் உள்ளது. இதற்கான முன்நகர்வுகளை தற்பொழுது நகர்த்தவேண்டிய தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. நாம் இதனை தவறவிடுகின்ற பட்சத்தில் எதுவும் நடக்கலாம். கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பூர்வீகக் குடிமக்களாலும் இராணுவத்தினராலும், இராணுவ ஒட்டுக்குழுவினாலும், முஸ்லீம் காடையர்களாலும் கொலை செய்யப்பட்டனர். அதனுடைய வடுக்கள் இன்னமும் ஆறாத நிலையில் கிழக்கு மாகாணத்தில் மீண்டும் தமிழ் மக்களுடைய பிரதேசங்களை சூறையாடும் நடவடிக்கையில் அரசாங்கம் தனது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுத்திட்டம் ஒரு கண்துடைப்பாகவே பேசப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சட்டங்களைக்கூறி தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும். அவ்வாறு வருகின்றபொழுது கிழக்கு மாகாணம் சிறந்த ஒரு நகரமாக அமையும். அரசியலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் விட்டுக்கொடுக்கம் செயல்காரியங்களில் இறங்குவார்களாகவிருந்தால் சிங்களவர்களும், முஸ்லீம்களும் தமிழர்களின் கோவணத்தை உருவிவிடுவார்கள் என்பது உறுதி.

– நெற்றிப்பொறியன் –

Eastern Province

ranil-wickramasinghe-and-maithripala-sirisena-640x400

tna-a

Nazeer-Ahamad

IMG_0262

 

 

SHARE