குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொள்ளும் விஜய் டிவியின் சூப்பர்ஸ்டார்.. யார் தெரியுமா

91

 

விரைவில் நாம் அனைவரும் எதிர்பார்த்த குக் வித் கோமாளி சீசன் 5 துவங்கவுள்ளது. இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளிவந்திருந்தது.

இதுவரை நடந்த நான்கு சீசன்களிலும் நடுவராக பணிபுரிந்து வந்த செப் வெங்கடேஷ் பட், இயக்குனர் பார்த்திபன் மற்றும் மீடியா மேசன்ஸ் டீம் ஆகியோர் இந்த சீசனில் வெளியேறியுள்ளனர். இதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை.

வெங்கடேஷ் பட்-க்கு பதிலாக நடிகரும், சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்துள்ளார். இவருடைய என்ட்ரி எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பேசப்படப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

குக் வித் கோமாளி சீசன் 5ல் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் குறித்து தொடர்ந்து பட்டியல்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. பிக் பாஸ் பிரபலங்கள் தினேஷ், பூர்ணிமா, தொகுப்பாளினி ஜாக்குலின், Youtuber இர்பான், நடிகர் விடிவி கணேஷ் போன்றவர்களின் பெயர்கள் போட்டியாளர்களின் பட்டியலில் கூறப்படுகிறது.

விஜய் டிவியின் சூப்பர்ஸ்டார்
இந்த நிலையில், விஜய் டிவியின் சூப்பர்ஸ்டார் பிரபலமான தொகுப்பாளினி பிரியங்கா குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்துகொள்ள போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொகுப்பாளினியாக இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும். போட்டியாளராக களமிறங்குகிறார் என்றால் சொல்லவே தேவையில்லை, Full Fun தான்..

SHARE