சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக களமிறங்கி ரசிகர்களின் மனதை வென்றவர் மணிமேகலை.
அந்த தொலைக்காட்சியில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஒரு பாடலில் நடனம் ஆடியவரை பார்த்து காதலில் விழ வீட்டை எதிர்த்து ஹுசைன் என்பவரை திருமணமும் செய்தார்.
கல்யாணம் முடிந்த கையோடு விஜய் டிவி பக்கம் வந்த மணிமேகலையின் வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்தது. புதிய கார்கள், வீட்டு மனை வாங்குதல், வீடு கட்டுவது என முன்னேறினார்.
அவருக்கு மிகவும் கைகொடுத்தது விஜய்யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
மாத வருமானம்
தொலைக்காட்சி மூலம் சம்பாதிக்கும் மணிமேகலை சொந்தமாக ஒரு யூடியூப் ஒன்று வைத்துள்ளார்.
அதில் எப்போதும் வீடியோக்கள் போட்ட வண்ணம் இருப்பார், அவரின் வீடியோக்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல ரீச் கிடைக்கும்.
ஒரு பேட்டியில் நடிகை மணிமேகலை தனது மாத செலவு மட்டுமே ரூ. 40 முதல் ரூ. 45 ஆயிரம் முதல் செலவு ஆவதாக கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இவரது யூடுயூப் வருமானம் மட்டும் கிட்டத்தட்ட 59 ஆயிரம் மாதம் வருமானம் வருவதாக பிரபலங்களின் யூடுயூப் வருமானங்களை வெளியிடும் யூடுயூப் பிரபலம் ராபி தெரிவித்து இருக்கிறார்.