குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

106

ஐபிஎல் தொடரின் 17 ஆவது லீக் போட்டியில் குஜராத் – பஞ்சாப் அணிகள் மோதியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 199 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக கில் கடைசி வரை அவுட் ஆகாமல் 89 ஓட்டங்கள் எடுத்திருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 2 விக்கெட்டும் ஹர்ப்ரீத் ப்ரார், ஹர்சல் படேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான் – பேர்ஸ்டோவ் களமிறங்கினர். தவான் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் பவர்பிளேயில் சிறப்பாக ஓட்டங்களை சேர்த்தனர்.

பவர் பிளே முடிந்த முதல் ஓவரின் முதல் பந்தில் பேர்ஸ்டோவ் 22 ஓட்டங்களில் போல்ட் ஆனார். அடுத்து வந்த சாம் கரண் 5 ஓட்டங்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களிலும் ராசா 15 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து ஜிதேஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி சேர்ந்து அணியின் வெற்றிக்காக போராடினார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் குவித்தது. ரஷித்கான் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசிய ஜிதேஷ் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஷஷாங்க் சிங் அரை சதம் விளாசினார்.

அடுத்து வந்த அசுதோஷ் சர்மா- ஷஷாங்க் சிங் ஜோடி பஞ்சாப் வெற்றிக்கு போராடினர். இறுதியில் 12 பந்துக்கு 25 ஓட்டங்கள் தேவை என்ற நிலைக்கு கொண்டு வந்தனர். 19 ஆவது ஓவரில் இந்த ஜோடி 18 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை தர்ஷன் நல்கண்டே வீசினார். முதல் பந்தில் அசுதோஷ் சர்மா கேட்ச் ஆனார். அடுத்த பந்தை அகல பந்தாக வீசினார். 3 ஆவது பந்தில் ஹர்ப்ரீத் 1 ஓட்டங்களை எடுத்தார்.

இதனால் கடைசி 3 பந்துக்கு 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ஷஷாங்க் சிங் பவுண்டரி அடித்து ஸ்கோரை சமன் செய்தார். அடுத்த பந்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.

இறுதியில் பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்தது. குஜராத் தரப்பில் ரூர் அகமது 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

SHARE